எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிறுமி பாலியல் வன்முறை வழக்கில் ஆசாராம் பாபு குற்றவாளி

ஜோத்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஜோத்பூர், ஏப்.25 ராஜஸ்தான், குஜராத் உள் ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் ஆசாராம் பாபு (77). இவரது ஜோத்பூர் ஆசிரமத்தில் தங்கி படித்த உ.பி. ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த சிறுமி, ஆசாராம் பாபு தன்னிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதேபோல் பல்வேறு பாலியல் வன்முறை வழக்குகள் இவர் மீது குவிந்தன.

இதையடுத்து, ஆசாராம் பாபுவை கடந்த 31-.8-.2013 அன்று காவல்துறையினர் கைது செய்து பாலியல் வன்முறை மற்றும் குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே,ஷாஜஹான்பூர் சிறுமி வழக்கில் ஆசாராம் பாபு மற்றும் அவருடன் குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கடந்த நான்காண்டுகளாக ஜோத்பூர் நகரில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசுத்  தரப்பு மற்றும் எதிர்தரப்பு வாதங்கள் கடந்த அய்ந்து மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் ஏப்ரல் 25 ஆ-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி மதுசூதன்  தெரிவித்திருந்தார். அதன்படி ஆசாராம் பாபு அடைத்து வைக்கப்பட்டுள்ள ஜோத் பூர் சிறைக்கு நீதிபதி இன்று சென்று, அங்குள்ள விசாரணை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கினார். அப்போது ஆசாராம் பாபு மற்றும் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படுகிறது.

ஆசாராம் பாபு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டிஆசாராம்பாபு ஆதரவாளர்கள்வன்முறையில்ஈடுபடக் கூடும் என்பதால் சிறையை சுற்றியும், அருகில் உள்ள பகுதிகளிலும் காவல்துறை யினர்குவிக்கப்பட்டுபாதுகாப்புபலப் படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் ணின் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. டில்லி, ராஜஸ்தான், குஜராத், அரி யானா மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner