எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குட்கா ஊழல்: சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட்டது: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை, ஏப்.26 குட்கா ஊழல் புகார் தொடர்பாக சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிடக்கோரி  தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், சென்னை உயர்நீதிமன்றத் தில் பொதுநல வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு விசாரித்தது. இறுதிக்கட்ட வாதங்கள் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது.

சுமார் 3 மாதத்திற்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப் போது, குட்கா ஊழல் தொடர்பான விசாரணையை சி.பி.அய். விசாரிக்க வேண் டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பித்தனர். குட்கா விவகாரத்தில் மக்களுக்கு உண்மை நிலை தெரியவேண்டும். குட்கா தொடர்பாக போதிய விளம்பரம் செய்து மக்களிடம் தகவல் பெற வேண்டும்  என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.இந்நாள்...இந்நாள்...

1977 - ஈழ தந்தை செல்வா மறைவு
1999 - சிறுபான்மையினர் உரிமை நாள்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner