எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செய்தித்துளிகள்

*அ.தி.மு.க. அரசுக்கு ஆளுநர் நற்சான்றிதழ் வழங்கி இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது - தளபதி மு.க.ஸ்டாலின்
(ஏற்கெனவே இருந்த ஆளுநர் இரு அ.தி.மு.க. கோஷ்டிகளின் கைகளை இணைத்து வைத்தது முதல் பாகம் - இப்பொழுது அதன் இரண்டாம் பாகம் - அவ்வளவுதான்!).

*பா.ஜ.க.வைத் தோற்கடிப்பதற்கே முன்னுரிமை அளிப்போம் - சீதாராம் யெச்சூரி சி.பி.எம். தேசிய பொதுச்செயலாளர்
(2014 தேர்தலிலேயே இந்த முடிவை எடுத்திருக்கக் கூடாதா?).

*குப்பைக் கிடங்குகளில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகளைத் தின்பதால் இலங்கையில் யானைகள் உயிரிழப்பு.  (இலங்கையில் தானே- மனித உயிர்களே அங்கு துச்சமாச்சே!).

*நாடு முழுவதும் 24 போலி பல்கலைக் கழகங்கள் - யூ.ஜி.சி. எச்சரிக்கை!  (அந்தப் பட்டியலில் சமஸ்கிருத, இந்தி பல்கலைக் கழகங்கள் கண்டிப்பாக இருக்குமே - அதனால்தான் நடவடிக்கை இல்லையோ!).
*ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிடவேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்
(யார்தான் போராடவில்லை இந்த ஆட்சியில்?).

*வினாத்தாள் வெளியானதால் சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்புப் பொருளாதார பாடத்துக்கு மறுதேர்வு.  (இந்த சி.பி.எஸ்.இ. திட்டத்தின் அடிப்படையில்தான் நீட்' தேர்வும் - இவற்றின் யோக்கியதையைத் தெரிந்துகொள்வீர்!).

*நீட்' தேர்வு மய்யங்களைத் தமிழகத்திலேயே ஒதுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

(ஒடுக்கப்பட்ட மக்களை நீட்டாக' ஒழித்துக் கட்டுவதுதானே நீட்').

*சாஸ்த்திரா பல்கலைக் கழகத்தின் சார்பில் சென்னையில் பக்தித் திருவிழா!
(பார்ப்பனர்கள் கல்விக் கூடங்களை நடத்துவது எதற்கென்று இப்பொழுது புரிகிறதா?)

*சர்வதேச தரத்தில் இரு புதிய வகை இரயில்கள் - பெரம்பூரில் தயாரிப்பு (அதெல்லாம் சரிதான். ஒரு பயணச் சீட்டு வாங்கினால், அவருக்கான இருக்கையை முதலில் உறுதிப்படுத்துங்கள்.)

*வழிப்பறி, செயின் பறிப்பு, திருட்டு புகார்களைப் பெற காவல்துறை மறுப்பு. (கடவுள்களே திருடுப் போகின்றனவே, அதற்கென்ன செய்வது?)

*ஜம்மு காஷ்மீரில் கழிப்பறை கட்டாத அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தி வைப்பு! (ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் கோவில்களில் முதலில் கழிப்பறை கட்டப்படட்டும்!)

*போலி சாமியார்களிடம் நம்பிக்கை வைக்காதீர்கள் - அசோக் கெலாட் ராஜஸ்தான் மேனாள் முதலமைச்சர்
(யானை லத்தியில் என்ன முதல் லத்தி - இரண்டாவது லத்தி?  சாமியார்கள்  என்றாலே போலி ஆசாமிகள்தானே!)

Banner
Banner