எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான கொடுமைகள் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?

மாயாவதி கேள்வி

மைசூரு, ஏப்.27 தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான கொடுமைகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி மவுனம் காப்பது ஏன் என உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார். கருநாடக சட்டசபைக்கு வருகிற மே 12- ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச் சார்பற்ற ஜனதா தளமும், உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதியின்பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.  மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் நேற்று இந்த கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாயாவதி பேசியதாவது:- மத்திய மோடி அரசு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரு கிறது.உத்தரப்பிரதேசம்,பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங் களில் இந்து அமைப்பினர் தாழ்த்தப்பட்ட மக்களை கொடு மைப்படுத்தி வருகிறார்கள். இதுபற்றி தெரிந்திருந்தும் பிரதமர் மோடி, எதையும் கண்டுகொள்ளாமல் மவுனமாக உள்ளார்.மோடியின்நடவடிக் கையால் நாட்டின் பொருளா தாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

மோடியின் நடவடிக்கை யால், நாட்டு மக்கள் ஏராளமான துன்பங்களை அனுபவித்து விட்டனர். இதனால் மக்கள் மோடி அரசு மீது வெறுப்பில் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner