எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பா.ஜ.க. ஆட்சியா? பயங்கரவாத ஆட்சியா?

இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் வன்முறை அதிகரிப்பு

ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா தீவிரவாத அமைப்புகளுடன் மத்திய அரசுக்குத் தொடர்பு

அமெரிக்க செனட்டில் தாக்கலான அதிர்ச்சியூட்டும் அறிக்கை

புதுடில்லி, ஏப்.28 இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், ஜாதி, மத வன்முறைகள் முன்னெப்போதும் இல் லாத அளவிற்கு அதிகரித்து இருப்பதாக அமெரிக்க அரசு நிறுவனம், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அறிக்கை அளித்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள, சர்வதேச மதச் சுதந்திரம் என்ற அமைப்பு அமெரிக்காவிலும் உலக நாடுகளிலும் உள்ள மதச் சுதந்திரம் குறித்துஆய்வுசெய்து,அந்நாட்டின் அதிப ருக்கும், செனட்டிற்கும் அறிக்கை அளிக்கக் கூடியதாகும் அந்த வகையில் மதச் சுதந் திரம் அமைப்பு, வியாழக்கிழமையன்று தனது அறிக்கையை அமெரிக்க அரசுக்கு அளித் துள்ளது.

அதில்,  இந்தியாவில், 2017-ஆம் ஆண்டில் மட்டும் பசுக் காவலர்கள் என்ற பெயரில் சில அமைப்புகள் முஸ்லிம்களுக்கும் தாழ்த்தப் பட்டவர்களுக்கும் எதிராக வன்முறையில் ஈடுபட்டனர்; இதில் பாதிக்கப்பட்ட சமூ கங்கள் பல தலைமுறைகளாகத் தோல் பொருட்கள் செய்வதிலும் மாட்டிறைச்சி வியாபாரம் செய்வதிலும் ஈடுபட்டு வருப வர்கள்;இவர்கள்மீதுநிகழ்த்தப்பட்டவன் முறைகளில் குறைந்தது 10 பேராவது கொல் லப்பட்டிருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

இதன்மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தி னர்பெரும்அச்சுறுத்தலுக்குஆளாகிஇருக் கின்றனர்;இந்துக்கள்அல்லாதோர்மட்டு மன்றி, இந்து மதத்தைச் சேர்ந்த தாழ்த் தப்பட்டவர்களும் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள மதச் சுதந்திரம் அமைப்பு, கடந்த 2 ஆண்டுகளாக இதுபோன்ற வன்முறைகள் இந்தியாவில் அதிகரித்து வருவதாகவும், பிரதமர் மோடியின் கட்சியைச் சேர்ந்தவர்கள், மற்ற மதத்தினர்மீது வெறுப்பை விதைப்பதே வன்முறைக்கு காரணமாக இருக்கும் நிலையில், பிரதமர் மோடியோ அதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவில் ஆட்சி செய்யும் பாஜக-வினர், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர்; பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது கண்டனம் செய்தாலும், இந்துத்துவத் தீவிரவாதக் குழுக்கள், சிறுபான்மையினருக்கு எதிராகப் பாகுபாடு காட்டும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்; சிறுபான்மையினர் அமைப்புகளின் தலை வர்களும் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர்; எனவே அமெரிக்க அரசு இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தாழ்த்தப்பட்டவர்கள், சிறு பான்மை மதத்தினர் மீதான வன்முறைத் தாக்குதல்களைத் தடுக்க மோடி அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை; பாதிக்கப் பட்டவர்களுக்கு முழுமையான நீதியும் வழங்கவில்லை என்பதும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு இருப்பதுடன், சிறுபான்மையினர் மீதான வன்முறை களுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு அமெரிக்க விசாக்கள் மறுக்கப்பட வேண்டும்; இக்குற்றங்களோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்குகள் தொடரப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு, அதா வது பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் அமலாக்கப்பட்டுள்ள மதமாற்றத் தடைச் சட் டமும், பசுவதை தடைச் சட்டமும் நீக்கப்பட்டு, அங்கு பன்னாட்டு மனித உரிமைத் தர அளவுகோல்களின்படி, மதச் சுதந்திரமும் மனித உரிமைகளும் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner