எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வெறுப்புணர்வுப் பேச்சில் முதல் பரிசைத் தட்டிச் செல்லும் பா.ஜ.க.!

புதுடில்லி, ஏப். 28 வெறுப்புணர் வுப்பேச்சுக்குஎதிரானவழக் கில் பாஜக.வினர் அதிகள வில் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

ஜனநாயகசீர்திருத்தசங்கம் மற்றும் தேசியதேர்தல் கண் காணிப்பகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், பாஜக.வில் உள்ள  எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள்பெண் களுக்கு எதிரான குற்ற வழக் குகளை எதிர்க்கொண்டு வரு கின்றனர். 768 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 4,077 சட்ட மன்றஉறுப்பினர்களின்வேட்பு மனுக்களை ஆய்வு செய்ததில் 1,580 அதாவது 33 விழுக்காடு உறுப்பினர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதில் 48 பேர் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட வர்கள். பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் பாஜக முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து சிவசேனா, திரிணா முல் காங்கிரசு கட்சிகள் உள் ளன.

பாஜக.வை சேர்ந்த 12 நாடாளுமன்ற,சட்டமன்றஉறுப் பினர்கள் பெண்களுக்கு எதி ரானகுற்றவழக்குகளைஎதிர் கொள்கின்றனர். வெறுப்புணர் வைத் தூண்டும் பேச்சுகள் மீதான வழக்குகளிலும் பாஜக வினர் முதலிடத்தில் உள்ளனர்.

15 மக்களவை உறுப்பினர்கள், 43 சட்டமன்ற உறுப்பினர்கள் என 58 பேர் வெறுப்பு பேச்சு வழக்குகளில் சிக்கியுள்ளனர். மதவெறிப் பேச்சு தொடர்பான வழக்குகளில் பாஜக.வுக்கு தான் முதலிடம். இக்கட்சியை சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட 27 பேர் மீது இந்த வழக்கு உள்ளது. பாலியல் குற்றச்சாட்டைப் பொறுத்தவரை சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் உ.பி.யின் உன்னாவ் சட்டமன்ற உறுப்பினர் குல் தீப்சிங் செங்கர். மத்திய இணை அமைச்சராக உள்ள சாமியார் சாக்சி சிறை சென்று பிணையில் வெளியே உள்ளார்.

சாமியார் சாக்சி சில ஆண் டுகளுக்கு முன்பு ஆக்ரா நெடுஞ்சாலையில் விபத்திற்குள்ளான ஒரு காரில் இருந்து காப்பாற்றக் கூறிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார் என்ற குற்றச்சாட்டு சான்றுகளுடன் நிரூபணமாகி திகார் சிறையில் இருந்தார். பிறகு பிணையில் வெளிவந்துஇன்றளவும்இவர் பல பாலியல் வன்கொடுமை வழக்குகளைச் சந்தித்துவருகிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner