எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செய்தித்துளிகள்

* 2016 ஆம் ஆண்டின் நிலவரப்படி 1,33,000 பாலியல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

(இந்தத் தாமதிக்கப்பட்ட நீதியால் குற்றம் புரிந்தவன் மேலும் மேலும் அதைச் செய்துகொண்டுதானே இருப்பான்!).

* இந்திய மக்கள் தொகையில் 14 சதவிகிதம் உள்ள முஸ்லிம்களுக்கு அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்.,களில் கிடைத்துள்ள இடம் வெறும் 2.5 விழுக்காடுதான்.

(2.5 விழுக்காடு உள்ள பார்ப்பனர்கள் எத்தனை மடங்கு இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் மட்டும் வெளியிலே வரவே வராது!).

* தமிழ்நாட்டில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் 8 லட்சம் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர்.  (சட்டம் ஒழுங்கு குழந்தைத் தனமாக இருக்கிறது என்பதற்கு அடையாளம்!).

* ஜப்பானில் ஒவ்வொரு குடிமகனும் ஆண்டு ஒன்றுக்கு 12 தடவைக்குமேல் முழு மருத்துவச் சோதனை செய்துகொள்கிறார்கள்.

(இந்தியாவில் ஆண்டுக்கு ஒருமுறை முழு சோதனை செய்துகொள்ள அரசு உதவி செய்யக்கூடாதா?).

* இலங்கையில் தமிழர்கள் பகுதிகளில் போதை நடமாட்டம் அதிகம்.

(தமிழீழ இளைஞர்களைச் சீரழிக்க இலங்கை அரசே கூட மறைமுகமாக இந்த ஏற்பாட்டைச் செய்யக்கூடும். ஒரு காலகட்டத்தில் சீன இளைஞர்கள் இப்படித்தானே காயடிக்கப்பட்டார்கள்.).

* உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. 37.29 விழுக்காடு ஆதரவோடு முன்னணியில் இருக்கிறது.. (மகிழ்ச்சிதான். ஆனாலும், மிதந்துவிடக் கூடாது - எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.).

* கோவில் திருப்பணி நிதிக்கு வரி விலக்குத் தேவை. - கிராமக்கோவில் நிர்வாகத்தினர்

(ஏன், கோவில் உண்டியலில் குவியும் பணம் எல்லாம் யார் வயிற்றில் அறுத்துக்கட்ட?).

* ஜாதி ரீதியாக சமூகத்தை பிளவுபடுத்த காங்கிரசு முயற்சி - பிரதமர் நரேந்திர மோடி

(மோடி கூறும் இந்து ராஜ்ஜியம், ராமராஜ்ஜியம் என்பதே ஜாதியைக் காப்பாற்றுவதுதானே!)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner