எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுச்சேரி, ஏப்.29 சுத்தமான கிரா மம் என்று சான்றிதழ் பெற்றால் மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என்ற உத்தரவை புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி திரும்பப் பெற்றார். புதுச்சேரி துணை நிலை ஆளுநராக 2016 மே மாதம் கிரண்பேடி பொறுப்பேற்றார். முன்னாள் அய்பிஎஸ் அதிகாரி யான கிரண்பேடியின் இந்த நியமனம் பெரும் வரவேற்பை பெற்றது. திகார் சிறையில் சீர் திருத்தம் கொண்டு வந்ததுபோல், புதுச்சேரியிலும் மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

திடீரென்று கிராமங்களில் தூய்மைப் பணியை வலியுறுத் தும் வகையில் வறுமைக்கோட் டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி திட்டத்தில் புதிய கெடுபிடியை ஆளுநர் கிரண்பேடி கொண்டு வந்தார். சுத்தமான கிராமம் என சான்றிதழ் பெற்றால் மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என்று கிரண்பேடி உத்தரவிட் டார். சான்றிதழ் பெறாத கிராமங்களில்இலவச அரிசிவழங்கப்படாதுஎன்று அவர் கூறினார். இந்த அறி விப்புக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் இந்த உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்தனர். மக்களும் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்தனர். அதையடுத்து, சுத்தமான கிராமம் சான்றிதழ் பெற்றால்தான் இலவச அரிசி வழங்கப்படும் என்ற உத்தரவை, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி திரும்பப் பெற்றார்.

அதிர்ச்சி!

இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்குப் புற்றுநோய்க்குப் பலியாகும்குழந்தைகள் 25,143.தமிழ்நாட்டில்மட்டும் 1,350 குழந்தைகள் பாதிக்கப் படுகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner