எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப். 29 -உத்தரகண்ட் உயர்நீதிமன்றத் தலைமை நீதி பதி கே.எம். ஜோசப்புக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி பதவி மறுக்கப்பட்டது, நாட்டில் ஓர் அறிவிக்கப்படாத அவசர நிலை இருப்பதையே காட்டு கிறது என்று சென்னை உயர்நீதி மன்றத்தின்ஓய்வுபெற்றநீதி பதி அரிபரந்தாமன் குற்றம்சாட் டியுள்ளார்.

இதுதொடர்பாக,முகநூலில் அறிக்கைஒன்றைநீதிபதி அரிபரந்தாமன் வெளியிட்டுள் ளார். அதில் அவர் குறிப்பிட்டி ருப்பதாவது: உத்தரகாண்ட் உயர்நீதிமன் றத்தலைமைநீதிபதிகே.எம். ஜோசப்புக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி பதவி மறுக்கப்பட்டதற் குக் காரணம், உத்தரகண்ட்டை குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ்கொண்டு வந்த மத்திய அர சின் நடவடிக்கையை அவர் ரத்து செய்ததுதான். பாஜக தலைவர் அமித்ஷா குற்றச்சாட்டுக்கு உள்ளான இஸ்ரத் ஜகான் என் கவுண்ட்டர் வழக்கில், குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயந்த் படேல், சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதற்காகவே ஜெயந்த் படேல்16ஆண்டுகள்பணி புரிந்துஇருந்தாலும் அவருக்கு தலைமை நீதிபதி பதவி மறுக்கப்பட்டதுடன்,அவர் கருநாடகத்துக்கும் பின்னர் அலகாபாத்துக்கும் பழிவாங்கும் முறையில் மாற்றல் செய்யப்பட் டார். இதனால் ஜெயந்த் படேல் தனது நீதிபதி பதவியையே ராஜினாமா செய்தார்.

இஸ்ரத் ஜகான் வழக்கில் உச்சநீதிமன்றத்திற்கு உதவிபுரிய, உச்சநீதிமன்றத்தால் அமிக்கஸ் க்யூரிவழக்குரைஞராகமூத்த வழக்குரைஞர் கோபால் சுப் பிரமணியம் நியமிக்கப்பட்டார்; அப்போது, அமித் ஷா மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக அவர் வாதாடினார் என்பதற்காகவே, அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பதவி மறுக்கப்பட்டது. 2002 குஜராத் கலவரம் தொடர்பான பெஸ்ட் பேக்கரி வழக்கு விசாரணையில், தலையிட்ட உச்சநீதிமன்றம் அந்த வழக்கை குஜராத்தில் இருந்து மும்பைக்கு மாற்றியது. அதை விசாரித்த மாவட்ட நீதி பதி திப்சே, ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கினார். பின்னர் அவர் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனார். ஆனால், 2014- இல் பாஜக ஆட்சிக்கு வந்த உடனேயே அவர்அலகாபாத்துக்குமாற் றல் செய்யப்பட்டார். இவை யெல்லாம் இந்திரா காந்தியின் அவசர நிலை காலத்தை நினைவுபடுத்துகிறது. ஒரே வித்தியாசம், இது அறிவிக்கப் படாத அவசர நிலை. இவ்வாறு நீதிபதி அரிபரந் தாமன் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner