எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பாரீஸ், ஏப். 29 ஊடகங்களுக்கு சுதந்திரம் அளிப்பதில் இந் தியா138ஆம்இடத்தில்இருப் பதாகபன்னாட்டுஆய்வ றிக்கை ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

உலக அளவில் உள்ள 180 நாடுகளில் ஊடகச்சுதந்திரம் பற்றிய ஆய்வறிக்கையை பன் னாட்டு ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்டிருக்கிறது. இதன்படி, ஊடகச் சுதந்திரத்தில் இந்தியா 138 ஆவது இடத்தைப் பெற்று மிகவும் மோசமான நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டைவிட இரண்டு இடங்கள் பின்னுக் குச்சென்றுள்ளது.இதற்கு காரணம் இந்தியாவில் ஊடக வியலாளர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் எழுதுப வர்கள், தங்கள் கருத்துகளை சுதந்திரமாகவெளியிடஅச்சப் பட வேண்டிய நிலை இருக் கிறது.

இந்தியாவிலுள்ளமத அமைப்புகளால் ஊடகவியலா ளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மிக எளிதாக தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் ஊடகவி யலாளர்கள் யாரையும் எளிதாக அணுக முடிவதில்லை.

ஊடகவியலாளர்கள் எதிர் கொள்ளும் சவால்களை சீர்படுத்த மோடிதலைமையிலானஅரசு முன்வருவதில்லை.ஊடகவியலாளர்களுக்குஎதி ராக வரும் கொலைமிரட்டல் களைக்கூட கண்டு கொள்வ தில்லை. கடந்த ஆண்டு கவுரி லங்கேஷ் உள்ளிட்ட பலபத்திரிகையாளர்கள்கொல் லப்பட்டுள்ளனர். பல இடங் களில் பத்திரிகையாளர்கள் தாக் கப்படுகின்றனர்.

இப்பட்டியலில் நார்வே முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதுவும்இரண்டாவதுமுறை யாக முதலிடத்தை பிடித்துள் ளது. பாகிஸ்தான் இந்த பட்டி யலில் 139 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. வடகொரியா, எரித்திரியா, துர்க்மெனிஸ்தான், சிரியா ஆகியவை கடைசி இடங்களில் உள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner