எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெங்களூரு, ஏப்.29 கருநாடகா சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரசு உள்பட பல கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கு கட்சி சார்பில் விளம்பரங்கள் ஒளிப்பரப்படும்.

இந்நிலையில், பாஜக சார்பில் ஒளிப் பரப்பட்ட 3 விளம்பரங்கள் தேர்தல் விதியை மீறி எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரசு சார்பில் சட்டமன்ற மேல்சபை உறுப்பினர் வி.எஸ்.உக்ரப்பா புகார் அளித்தார். அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட 3 விளம்பரங்களை ஒளிப்பரப்ப மீடியா சர்டிபிகேஷன் மற்றும் மானிட்டரிங் குழு தடை விதித்துள்ளது. ஜன விரோதி சர்கார், விப்காலா சர்கார் மற்றும் மூரு பாக்கியா என்ற இந்த 3 விளம்பரங்களுக்காக அனுமதி கடந்த 22  ஆம் தேதி பாஜக மாநில செயலாளர் கணேஷ் யாஜிக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து விளம்பரத்தில் கூறப்படும் கருத்துகள் தேர்தல் விதிகளை மீறி சொல்லப்பட்டுள்ளதால்,அதனைஒளிப் பரப்ப மற்றும் பகிர தடை செய்யப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner