எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜாடிக்கு ஏற்ற மூடி

பகோடா விற்கலாம் என்றார் மோடி

மாடு மேய்க்கலாம் என்கிறார் திரிபுரா பி.ஜே.பி. முதல்வர்

புதுடில்லி,ஏப்.30படித்த இளை ஞர்கள் வேலை தேடி அரசி யல்வாதிகள் பின்னால் செல் லாமல், பீடா கடை வைத்துப் பிழைக்கலாம் அல்லது மாடு மேய்க்கலாம் என்கிறார் திரிபுரா முதல்வர் பிப்லாப்குமார். திரிபுராவில் கடந்த கால் நூற்றாண்டாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடைபெற்று வந்தது. அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதன்மூலம் அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. கடந்த திரிபுரா சட்ட சபை தேர்தலில் ஒரு தொகு தியில்கூட வெற்றி பெறாத பாரதீயஜனதா,இந்தத்தேர் தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதைத் தொடர்ந்து திரிபுரா மாநில முதல்வராக பிப்லாப் குமார் தேப் பதவியேற்றார்.

மகாபாரத காலம் பிப்லாப் குமார் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகை யிலேயே பேசி வருகிறார். மகாபா ராதம் காலத்திலேயே, இன்டர் நெட், செயற்கைகோள் பயன் படுத்தப்பட்டு இருக்கிறது என்று பேசி அதிர்ச்சியை ஏற் படுத்தினார்.

இதைத்தொடர்ந்து, உலக அழகிபட்டத்தைகையி லெடுத்து சர்ச்சையை ஏற்படுத்தி னார். அய்ஸ்வர்யா ராய்க்கு உலக அழகி பட்டம் கொடுத்ததில் நியாயம் இருக்கிறது. ஆனால், டயானாஹெய்டனுக்குஉலக அழகி பட்டம் ஏன் கொடுத் தார்கள் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். அதோடு நிற்க வில்லை பிப்லாப் குமாரின் சர்ச்சைப் பேச்சு.

பீடா கடை, மாடு மேய்க்கலாம்

படித்த இளைஞர்கள் வேலை தேடி அரசியல்வாதிகள் பின்னால் செல்லாமல், பீடா கடை வைத்துப் பிழைக்கலாம் அல்லது மாடு மேய்க்கலாம், தொழில் செய்யலாம் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளி யிட்டார். அவரது இந்தப் பேச்சுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner