எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்?  கனிமொழி எம்.பி., கண்டனம்

சென்னை, ஏப்.30 தி.மு.க. மக ளிரணி செயலாளரும், எம்.பி.யு மான கனிமொழி டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்து வரு மாறு:-

பெண் பத்திரிக்கையாளர் களை இழிவாக சித்தரித்து முகநூலில்பதிவிட்ட பி.ஜே.பி. உறுப்பினர் எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த பின்னும், காவல்துறை அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வியப் பளிக்கிறது.

இழிவாகஒருபதிவுசெய்து விட்டு,பின்னர்அதைநீக்கு வதும்,வருத்தம் தெரிவிப்பதும் வழக்கமாகி வருகிறது. விமர் சனம் செய்ய அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. ஆனால் அவதூறு செய்ய அல்ல. காவல்துறை இவ்விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக் கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.விடுதலைக்கு விடுமுறை


மே நாளை முன்னிட்டு, மே முதல் நாள் (1.5.2018) செவ்வாய்க்கிழமை விடுதலைக்கு விடுமுறை. புதன்கிழமை வழக்கம்போல் விடுதலை வெளிவரும். அனைவருக்கும் மே நாள் வாழ்த்துகள்!

- ஆசிரியர்மே நாள் உறுதி ஏற்போம்!

நாளை - மே முதல் நாள் - மேதினியெங்கும் கொண்டாடப்படும் மே நாள் விழா!

உலகத் தொழிலாளர் உரிமையின் வெற்றி நாள் கொண்டாட்டத் திருவிழா!

காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் - அவன் காணத் தகுந்தது வறுமையோ! பூணத்தகுந்தது பொறுமையோ!' என்ற துயர நிலைதான் இன்றும் நீடிக்கும் அவலம்!

இதனை மாற்றிட, தந்தை பெரியார் காட்டிய வழி - அவனது தொழிலாளி' மாறி, அவன் பங்காளி'யானால் புதிய விடியல் பிறக்கும்!

அனைவருக்கும் மேநாள் வாழ்த்துகள்!

புதியதோர் உலகு செய்ய உறுதியேற்போம்!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்.

30.4.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner