எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ் செம்மொழி விருது திட்டமிட்டுப் புறக்கணிப்பு

புதுடில்லி,ஏப்.30மத்தியமனிதவளமேம் பாட்டுத்துறைஅமைச்சகம்வெளியிட் டுள்ள குடியரசுத் தலைவர் விருதுக்கான அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப் பட்டுள்ளது. ஏனைய செம்மொழிகள் அனைத்தும் விருதுக்குத்தகுதிபெறும்போது,தமிழ் மொழிமட்டும்ஏன்அந்தப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை? சமஸ்கிருதத்துக்குத் தான் ஆதரவு; தமிழ்மீது காழ்ப்புணர்ச்சி என்பதுதான் மத்திய பி.ஜே.பி. அரசின் நிலைப்பாடா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேசிய அளவில் 27 பேருக்கும், சர்வதேச அளவில் வெளிநாடுவாழ் இந்தியர் மற்றும் வெளிநாட்டவர் 9 பேருக்கும் ரூ. 5 லட்சம் விருதுத் தொகையுடன் குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படுகிறது. தவிர, இந்திய இளம் அறிஞர்கள் 29 பேருக்கு தலா ரூ. ஒரு லட்சம் விருதுத் தொகையுடன் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் (MBVS) விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விருது 1958 ஆம் ஆண்டு முதல் சம்ஸ்கிருதம், அரபி, பாரசீக மொழி அறிஞர் களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு முதல் பாலி/பிராகிருத மொழி அறிஞர்களுக்கும் விருது வழங்கி விரிவு செய்யப்பட்டது. தற்போது செம்மொழித் தகுதி பெற்ற மேலும் நான்கு மொழி அறிஞர்களுக்கு (ஒடியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம்) விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், செம்மொழி தகுதி பெற்ற தமிழ் மொழி மோடி அரசின் விருது அறிவிப்பில் சேர்க்கப்படவில்லை.

2018-ஆம்ஆண்டுக்கானகுடியரசுத் தலைவர் விருது, மஹரிஷி பத்ராயன் வியாஸ்சம்மான்(MBVS)விருதுஆகிய வற்றுக்குத்தகுதியானநபர்கள்விண்ணப் பிக்குமாறும், மேலும் தகுதியானவர்களைப் பரிந்துரைக்குமாறும் கல்வி நிறுவனங்க ளுக்கு மத்திய அரசின் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அண் மையில் சுற்றறிக்கை ஒன்றை (F.N.11-I / 2018- Skt.II dated 23 Feb. 2018) அனுப்பியுள்ளது. அதில், சமஸ்கிரு தம், பாலி/பிராகிருதம், அரபி, பாரசீகம், செம்மொழி தகுதி பெற்ற ஒடியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சிறந்த அறிஞர்களுக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 65 விருதுகளை வழங்கத் திட்டமிட்டு, மிகச் சிறந்த பங்களிப்பை நல்கிய அறிஞர்களின் பெயரைப் பரிந்துரை செய்யுமாறு கல்வி நிறுவனங்களின் தலைமைக்கு உத்தர விடப்பட்டுள்ளது. இதற்கான கடைசி நாள் 2018 ஏப்ரல் 30 ஆகும்.

தமிழ், தமிழ்நாடு என்றால் ஓரவஞ்சனைதானா?

தமிழகத்திலுள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும்,கல்லூரிகளுக்கும்தமிழக உயர்கல்வித் துறைச் செயலர் மூலமாக மத்தியமனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை அனுப்பப்பட் டிருக்கிறது. ஆனால் விருது அறிவிப்பில் தமிழ் இடம்பெறவில்லை. மத்திய அரசால் செம்மொழியாக 2004 செப்டம்பரில் தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட்டது. இந்நிலையில், செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ் மொழி, தற்போதைய மத்திய அரசின் விருதில் தவிர்க்கப்பட்டிருப்பது ஏன் என்பது புதிராகவே இருக்கிறது. இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. தமிழ், தமிழ்நாடு என்றால் ஓரவஞ்சனைதானா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner