எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அதிக அளவில் மாசுகேடான நகரங்களில் முதல் 14 நகரங்கள் இந்தியாவில் உள்ளன

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

புதுடில்லி, மே 2 அதிக அளவில் மாசு கேடான நகரங்களில் முதல் 14 நகரங்கள் இந்தியாவில் உள்ளன என்று உலக சுகாதார அமைப்பின் ஆய்வுத் தகவல் குறிப்பிட்டுள்ளது.

காற்றுமாசுக்காரணமாகஉலகம் முழுவதும் 70 லட்சம் பேர் ஆண்டு தோறும் உயிரிழந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆசியாமற்றும்ஆப்பிரிக்கக்கண் டங்களிலுள்ளவளரும்நாடுகளில் 10இல்9பேர்மாசடைந்தகாற்றை சுவாசிப்பதன்மூலமாக உயிரிழந்து வரு கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இருதய நோய்,  முடக்கு வாதம், நுரையீரல் புற்றுநோய் ஆகியவை காற்று மாசால் ஏற்பட்டு கால்வாசி உயிர்களை பலிவாங்கி வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பன்னாட்டளவில் 100 நாடுகளில் சுமார் 4,300 க்கும் மேற்பட்ட நகரங்களில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்ததைவிட தற் போது 50 விழுக்காடு அளவிற்கு காற்று மாசு அதிகரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே, உலக நாடுகள் காற்று மாசைக்கட்டுப்படுத்தவிரைந்துநடவ டிக்கைஎடுக்கவேண்டும்எனஉலக சுகா தார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில்,உலகின் மிக மாச டைந்த முதல் 15 நகரங்களின் பட்டியலில் 14 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளி யாகியுள்ளன. காற்று மாசு விதிகளின்படி 2.5 அடர்த்தியுள்ள நுண்கோள்களின் அடிப் படையில் மாசு மிகுந்த நகரங்களின் பட்டியலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. பன்னாட்டளவில் மோசமாக மாசடைந்த நகரங்களின் பட்டியலில் கான்பூர் நகரம் முதல் இடத்தை பிடித் துள்ளது. கான்பூரையடுத்து ஃபரிதாபாத் நகரமும், மூன்றாமிடத்தில் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி நகரமும் உள்ளன. கயா, பாட்னா ஆகிய நகரங்களைத் தொடர்ந்து நாட்டின் தலை நகரமாகிய டில்லி ஆறாவது இடத்திலும் உள்ளது.

டில்லிக்கு அடுத்த இடங்களில் உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகரமாகிய லக்னோ, ஆக்ரா, முசாபர்பூர்,  காஷ்மீர் தலைநகர் சிறீநகர், பாஜகவினரால் குரு கிராமம் என்று அழைக்கப்படுகின்ற குர்கான், ராஜஸ்தான் மாநில தலை நகரம் ஜெய்ப்பூர், பாட்டியாலா, ஜோத்பூர் ஆகிய நகரங்கள் வரிசைக்கிரமமாக உலக சுகாதார நிறுவனத்தால் வெளி யிடப்பட்டுள்ள மாசுக் கேடான நகரங் களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு தூய்மை இந்தியா திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்காகவே பல்லா யிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு வரும் நிலையில், பன்னாட்டளவிலான ஆய்வறிக்கையில், பன்னாட்டளவிலான மாசுக்கேடான நகரங்களின் பட்டியலில் முதல் 14 இடங்களில் இந்திய நகரங்களின் பெயர் இடம்பெற்றுள்ளது- என்பது பா.ஜ.க. மோடி அரசின் தூய்மை இந்தியா திட்டத்தினை தோலுரித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner