எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடவுள் சக்தி இவ்வளவு தானா?

கிறித்துவ ஆலயத்தில் உண்டியல் பணம் திருட்டு

தக்கலை, மே 2 குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை மிக்கேல் அதிதூதர் ஆலயத்தை வழக்கம் போல நேற்றுமுன்தினம் பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை ஆலயப் பொறுப்பாளர் ஜான் பால் ஆலயத்தை திறக்க சென்றபோது ஆலயத்தின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.  மேலும் ஆலய நிர்வாகிகள் பலரும் உள்ளே சென்று பார்த்தபோது  2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து ஆலய நிர்வாகம் சார்பில் தக்கலை காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். உடனடியாக  காவல் துறையினர் சம்பவம் இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.  தனது ஆலயத்தில் உண்டியலை காப்பாற்ற முடியாத கடவுளா உங்களைப் பாதுகாக்க போகிறது?

பக்தர்களே சிந்திப்பீர்!

கோவில் விழாவில் 3 பேர் படுகொலை

பட்டுக்கோட்டை,  மே 2 பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் மஞ்சவயல் கிராமத்தில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி 2 சமூகத்தினர் கோவிலில் தரிசனம் செய்ய கூடி இருந்தனர்.

கோவிலில் எந்த சமூகத்தினருக்கு முதல் மரியாதை செய்வது என்பதில் பிரச்சினை இருந்து வந்தது. சுடுகாட்டு பிரச்சினையும் நீண்ட காலமாக நீடித்து வந்தது. இந்த பிரச்சினை கோவில் திருவிழாவின் போது மோதலாக வெடித்தது.

இரு தரப்பை சேர்ந்தவர்களும் கத்தி, அரிவாள் உள் ளிட்ட ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். உருட்டுக் கட்டைகளாலும் சரமாரியாக தாக்கினர்.

இந்த மோதலில் சிவனேசன் (17), பிரதீப் (32) ஆகிய 2 இளை ஞர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டனர். பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மோதலில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ்கண்ணா தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார்.

கொலையுண்டவர்களில் ராஜேஷ்கண்ணாவும், பிரதீப்பும் அண்ணன்-தம்பிகள். இவர்களின் தந்தை சண்முகசுந்தரம் இந்த மோதலில் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

அவரும் வீரபாகு, கபிலன், விமலேந்திரன் ஆகிய 3 பேரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மோதலால் முருகன் கோவில் வளாகம் போர்க்களம் போல் காணப்பட்டது. செருப்புகள், சேர்கள் சிதறி கிடந்தன.

கோவில் விழாவில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில் விழாவில் இரு தரப்பினரிடையே மோதல் காவல்துறையினரின் மண்டை உடைப்பு

நாமக்கல், மே 2 நாமக்கல் பேருந்து நிலையம் பின்புறம்  உள்ளது வண்டிகாரத் தெரு. இங்குள்ள பகவதி அம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி நேற்று இரவு சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது  சாலையில் நடந்து சென்றவர்களிடம் சிலர்  தகராறு செய்ததாக  கூறப்படுகிறது.

இதனால் வாக்கு வாதம் ஏற்பட்டு  இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். தவலறிந்த நாமக்கல் டி.எஸ்.பி ராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மோதலை த டுக்க முயன்றனர். அப்போது  சிலர்  சரமாரியாக கற்களை வீசினர்.

இதில் டிஎஸ்பி ராஜேந்திரன்மீது கல் விழுந்தது. இதனால்,  நிலை தடுமாறிய ராஜேந்திரன் கீழே விழுந்தார். இதேபோல பாதுகாப்பு பணியில் இருந்த  காவல்துறையினர் முருகேசன், கந்தசாமி மற்றும் கதிரவன் ஆகியோர் மீதும்  கற்கள் விழுந்து தலையில் காயம்  ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.  அவர்களை சக காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில்  சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும் காவல்துறையினரின் வாகனம் தாக்கப்பட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இருபிரிவினரிடையே  ஏற்பட்ட மோதலின் போது  கற்கள் வீசப்பட்டதால் வீடுகளும்  சேதமடைந்தன. இதனால், அங்கு  பதட்டமான சூழல் நிலவி வருவதால் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner