எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ம.பி. முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு நாகா மடாதிபதிகள் குற்றச்சாட்டு

போபால், மே 2- தனது ஊழல் நடவடிக்கைகளை மறைப்பதற் காகவே, மத்தியப் பிரதேச பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், 5 மடாதிபதிகளுக்கு அமைச்சர் தகுதி வழங்கியிருப்பதாக நாகா மடாதிபதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக மடாதிபதி களும்- நாகா சாமியார்களுமான 13 பேர், முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் வீட்டை முற் றுகையிட்டும் போராட்டமும் நடத்தியுள்ளனர்.

மத்தியப்பிரதேச பாஜக அரசானது, நர்மதை நதிக் கரையை சீரமைத்து, மரக்கன்று கள் நடும் திட்டத்தை செயல் படுத்திய நிலையில், அதில் மிகப்பெரும் ஊழல் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மடாதிபதிகளும் இதேபோல குற்றச்சாட்டு வைத்ததுடன், உண்மையைக் கண்டுபிடிக்க நர்மதை யாத்திரை ஒன்றையும் அறிவித்தனர். சவுகான் அரசு, இந்த ஊழல் குற்றச்சாட்டை மறுத்து வந்தது. இதனிடையே திடீரென 5 மடாதிபதிகளுக்கு மட்டும் அமைச்சர் தகுதி வழங்குவதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார். இது புதிய சர்ச்சையைக் கிளப்பியது. இது மடாதிபதிகள் சிலரைக் கைக்குள் போட்டுக் கொண்டு, ஊழலை மறைக்கும் நடவடிக்கைதான்என்றுகுற்றச் சாட்டும் எழுந்தது. இந்நிலை யில்தான்,5மடாதிபதிகளுக்கு அமைச்சர் தகுதி வழங்கப்பட்ட தைக் கண்டித்து, 13 நாகா மடாதிபதிகள் இணைந்து, கடந்த திங்கள் கிழமையன்று முதல்வர் சிவ ராஜ் சிங் சவுகான் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். அப்போது அவர்கள் செய்தி யாளர்களிடம் பேசுகையில், கடந்த 12 ஆண்டுகளாக இல்லாமல், இப்போது திடீ ரென 5 மடாதிபதிகளுக்கு மட்டும் அமைச்சர் தகுதி வழங்கியது ஏன்?என்று கேள்வி எழுப்பிய நாகா மடாதிபதிகள், இதன்மூலம் சிவராஜ் சிங் சவுகான் எதையோ மறைக்க முயல்கிறார் என்ற அய்யம் தங்களுக்கு வருகிறது என்றும் கூறினர். தான் நர்மதை நதிக்கரையை நேரில் சென்று பார்த்ததாகவும், ஆனால்அங்கு மரக்கன்றுகள்ஒன்றுமேதென் படவில்லை என்றும், முற்று கைப் போராட்டத்திற்கான ஊர் வலத்தைத் துவங்கி வைத்த சாமியார் வைரஞானந்தசாமி தெரிவித்தார்.

மேலும், இதுதொடர்பாக சிபிஅய் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளுநருக்கும் பிரதமருக்கும் தாங்கள் மனுக்கள் அளித்துள்ளதாக கூறிய அவர், இதனை ஏற்காவிட்டால், சிவ ராஜ் சிங் சவுகானுக்கு எதிராக வீடு, வீடாகப் பிரச்சாரம் செய் வோம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner