எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஊழல் குறித்து பாடம் நடத்தும் கபட நாடகத்தை நிறுத்துங்கள்

மோடிக்கு சித்தராமையா அறிவுரை

பெங்களூரு, மே 2 கருநாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடக்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடி கருநாடகாவில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இதையொட்டி கருநாடக மாநில முதல்வர் சித்தராமையா சமூக வலைதளம் மூலம் மோடிக்கு  பல கேள்விகளை முன்வைத்து அதற்கான பதிலை பொதுமேடையில் கருநாடக தேர்தல் பிரச்சாரத்தின்போது விளக்கு வீர்கள் என்று நம்புகிறேன் என்று கேட் டுள்ளார். அன்புள்ள மோடி, கருநாடகாவிற்கு நீங்கள் வருவதை வரவேற்கிறோம். நீங்கள் இங்கே இருக்கும்போது, கன்னடர்களின் சில விஷயங்களை உங் களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்'' என்று டுவிட்டரில் போஸ்ட் செய்து இருக்கிறார்.

அதில் பதில் சொல்லுங்கள் மோடி என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி இருக்கிறார். ஜனார்த்தனன் ரெட்டி உங்களுடன் பிரச்சாரம் செய்வாரா?. அவர் குடும்பம், நண்பர்கள் என்று மொத்தம் 8 பேருக்கு தேர்தலில் வாய்ப்பு அளித்துள்ளீர்கள். இது பாஜகவிற்கு 10-, 15 இடங்களில் உதவும் என்று நினைத்து வாய்ப்பளித்துள்ளீர்கள். ஆனால் கடைசியில் எங்களுக்கு ஊழல் குறித்து பாடம் நடத்துகிறீர்கள். இத் தகைய கபட நாடகத்தை முதலில் நிறுத்துங்கள். கன்னடர்கள் ஒன்றும் காதில் தாமரைப்பூ வைத்துக் கொண்டு சுற்றவில்லை'' என்று தெரிவித்துள்ளார். முதலில் ஊழல் கறைபடிந்த எடி யூரப்பாவை முதல்வர் வேட்பாளராக அறிவித்தீர்கள். இப்போதும் அவர்தான்

உங்களின் முதல்வர் வேட்பாளரா?'' என்று கேள்வி கேட்டுள்ளார். பாலியல் குற்றவாளிகளுக்கும், சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்தவர்களுக்கும் நீங்கள் இந்த தேர்தலில் வாய்ப்பளித்துள்ளீர்கள். உத் தரப்பிரதேசத்தில் 16 வயது சிறுமியை வன்புணர்வு செய்த பாஜக எம்எல்ஏவை, பாஜக முதல்வர் ஆதித்யநாத் பாதுகாக் கிறார். உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் காஷ்மீர் சிறுமி வன் புணர்வைக்கூடநியாயப்படுத்திபேசு கிறார்கள். கத்துவா பகுதியில் சிறு மியை பாலியல் வன்கொடுமை செய்த வர்களுக்கு ஆதரவாக ஊர்வலம் சென்ற சட்டப்பேரவை உறுப்பினருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்க்கிறீர்கள்; ஆனால், கருநாடகாவில் அதிக பாலியல் குற்றங்கள் நடப்பது போல உங்கள் கட்சி விளம்பரம் செய்துகொண்டு இருக்கிறது'' என்று தெரி வித்துள்ளார்.

முதலில் நீங்கள் எல்லோருக்கும் ரூ.15 லட்சம் தருவதாக வாக்குறுதி அளித் தீர்கள். அதை தேர்தல் ஜூம்லா என்று அமித்ஷா மறுத்தார். வேலை வாய்ப்பு தருவதாகச் சொல்லிவிட்டு பக்கோடா விற்கச் சொன்னீர்கள். பண மதிப்பிழப்பு செய்துவிட்டு கருப்புப் பணம் வரும் என்றீர்கள். ஆனால் மக்களுக்கு கஷ்டம் தான் வந்தது. இப்போது இங்கே வந்து உண்மையான வளர்ச்சியை பார்த்து லாலி பாப் என்று அழைக்கிறீர்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

உங்களின் ஒரே கூற்று அனைவருக் கும் வளர்ச்சி என்பதுதான். ஆனால், உங்கள் அரசு, ஏழைகளை கைவிட்டு விட்டது. வங்கிகள் 2.71 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்கிறது. ஆனால், விவசாயிகளுக்கு வெறும் வெத்துவாக்குறுதிகள்மட்டுமேகிடைக் கிறது. விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவுத் தொகைக்கூட அதிகரிக்கப் படவில்லை. ஆனால், 2022 ஆம் ஆண்டில் அதை இரட்டிப்பு ஆக்குவேன் என்று வாக்குறுதி அளித்துள்ளீர்கள். உண்மையில் விவசாயிகளின் நலனை நினைத்துப் பார்க்கிறீர்களா?'' என்று கேள்வி கேட்டுள்ளார்.

மோடியின் தேர்தல் பரப்புரை மக்களைக் கவரவில்லை

மோடியின் தேர்தல் பரப்புரை மூலம் தேர்தல் வெற்றி தங்களது பக்கம் திரும்பும் என்று நம்பிக்கொண்டிருந்த பாஜகவினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமையவில்லை என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அளித்த வாக்குறுதிகள் குறித்துப் பேசவில்லை

மோடியின் நீண்ட பிரச்சார உரையை கூர்ந்து கவனித்த ஒரு பகுப்பாய்வாளர் கூறுகையில், மோடி வழக்கம்போல் பேசினார். ஆனால், இந்தி மொழியிலான அவரது பேச்சை கூட்டத்தினர் புரிந்து கொள்ளும் வகையில் சரியான முறையில் மொழி யாக்கம் செய்யப்படவில்லை. வழக்கம்போல் ராகுல்காந்தி, சித்த ராமையா, சோனியாகாந்தி, மன்மோகன் சிங் ஆகியோரை விமர்சனம் செய்தார். ஆனால், சித்தராமையா எழுப்பிய மாநில பாஜக தலைவர்களின் ஊழல் மற்றும் 2014 ஆம் ஆண்டு மோடி, தான் அளித்த வாக்குறுதிகள் குறித்துப் பேசவில்லை.

மோடி பேச்சில் இருந்த காரசாரம் கன்னட மொழிப் பெயர்ப்பாளரின் பேச்சில் இல்லை. கன்னடத்தில் மொழி பெயர்த்த பின்னர்தான் மோடியின் பேச்சுக்கு மக்கள் கைதட்டினர். இதன் மூலம் மோடியின் வழக்கமான உடல் அசைவுகளுடன் கூடிய பேச்சு கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பான்மையான மக்களுக்குப் புரியவில்லை'' என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner