எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மே 3 தமிழகத்துக்கு ஏப்ரல், மே மாதங்களுக் குரிய காவிரி நீரை 4 டிஎம்சி திறந்துவிட வேண்டும் என்று இன்று (3.5.2018) உச்சநீதிமன்றம் கருநாடகத்திற்கு உத்தரவிட்டது.

காவிரி பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 16- ஆம் நாளன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தமிழகத்துக்கு 177.24 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டும் மற்றும் 6 வாரங்களுக்குள் ஸ்கீம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியிருந்தது.

உச்சநீதிமன்றம் அளித்த ஆறுவார கால அவகாசம் முடிந்த நிலையில் ஸ்கீம் எனும் சொல்லுக்கு விளக் கம் கேட்டு மனு தாக்கல் செய்தது மத்திய அரசு.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத மத்திய அரசுமீது, தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. மத்திய அரசு தொடர்ந்த வழக்கும், தமிழக அரசின் மனுவும் ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

மத்திய அரசின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்

இந்த வழக்கின் விசாரணை, கடந்த மாதம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அதில், மத்திய அரசின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், மே 3 -ஆம் தேதி காவிரி வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு வழங்கியது. மேலும்  தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு,  ஸ்கீம்பற்றி தற்போது எது வும் கூற முடியாது என வழக்கை மே 3 ஆ-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இன்று விசாரணை

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (3.5.2018) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கு தொடங்கியதும் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,  காவிரி வழக்கில் வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றத்தில் மேலும் மூன்று வார கால அவகாசம் கேட்டுள்ளது.  வரைவுத் திட்டம் தயாராகி விட்டது என்றும்,  கருநாடக தேர்தல் பரப்புரையில் பிரதமர் மற் றும் மத்திய அமைச்சர்கள் இருப்பதால், மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற முடியவில்லை என தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

இந்நிலையில், தமிழகத்திற்கு 4 டிஎம்சி நீர் திறந்துவிட கருநாடகாவிற்கு  உச்சநீதிமன்றம் உத் தரவு  பிறப்பித்து உள்ளது. மேலும்  கருநாடகா இந்த உத்தரவை மீறினால்  கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்  எனவும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத் துள்ளது.  கருநாடக அரசு சார்பில்  தமிழகத்திற்கு 4 டிஎம்சி நீர் தர மறுப்பு தெரிவிக்கப்பட்டது.  காவிரி நீர் தரமுடியுமா? முடியாதா? கருநாடகாவில் தேர்தல் என்பதை எல்லாம் நாங்கள் ஏற்க முடியாது  காவிரி பிரச்சினையில் அரசியல் காரணங்களை ஏற்க முடியாது.  தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க மறுத்தால் கருநாடக தலைமைச் செயலாளரை நீதிமன்றத்திற்கு அழைக்கும் நிலை ஏற்படும்  என உச்சநீதிமன்றம் எச் சரித்தது. வரைவு திட்டம் அமைப்பது தொடர்பாக, மத் திய அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மே 8 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைப்பு

ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை உடனே திறந்துவிடவேண்டும். தற்போது செயல் திட்டம் அமலில் இல்லாத நிலையில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறப்பது கருநாடக அரசின் கடமை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் வழக்கை வரும் 8.5.2018 அன்று ஒத்தி வைத்தனர்.

காவிரி நதிநீர் ஆணையம் மீண்டும் பட்டை நாமம்''தானா?

களம் காண எழுவோம் -  தமிழர் தலைவர் அறிக்கை

எதிர்பார்த்தபடியே, மீண்டும் மோடி தலைமையிலான மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஸ்கீம்' ஏதும் தாக்கல் செய்யாமல், ஏதேதோ சாக்குப் போக்குக் காட்டி -உச்சநீதிமன்றம் மீண்டும் வழக்கை 8 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டது. ஏதோ கடிந்துகொள்வதுபோல ஒரு டிராமாவை'யும், செல்லக் கோப வார்த்தைகள்மூலம் காட்டி, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இணங்கிவிட்டதோடு, காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களுக்குள் அமைக்கவேண்டும் என்ற அதன் தீர்ப்பைக் காற்றில் பறக்கவிட்டு, தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்துவிட்டது!

மாபெரும் மக்கள் போராட்டத்தை மீண்டும் தமிழ்நாடு நடத்திடவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது!
தமிழ்நாடு அரசோ கடுமையான நடவடிக்கைகளில் ஈடு படாமல், மத்திய அரசுக்கு இணக்கம் என்ற சாக்கில் எந்தக் கிளர்ச்சிக்கும் மறுத்துவிட்ட காட்சிதான் நாம் காணும் வெட்கப்படும் நடைமுறை.

ஒத்தக் கருத்துள்ளவர்கள் களம் காண மீண்டும் ஆர்த்தெழு வதைத் தவிர வேறு வழிதான் என்ன? யோசிக்கவேண்டும்.

தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை

3.5.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner