எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கேள்வி கேட்பவர் மத்திய பி.ஜே.பி. அமைச்சர் உமாபாரதி!

போபால்,மே3மத்திய அமைச்சர் உமாபாரதி பாஜகவினர் தாழ்த்தப்பட்ட மக்களின் வீட்டில் உணவு உண்பதால்அவர்கள்தூய்மை யானவர்கள் ஆகிவிடமாட்டார் கள் என்று கூறி புதிய விவா தமொன்றை கிளப்பியுள்ளார்.     இது தொடர்பாக அவர் கூறி யதாவது:

நாங்கள் ராமர் அல்ல; தாழ்த்தப்பட்டமக்களின்வீட் டில்சாப்பிடுவதால் அவர்கள் தூய்மை அடைந்து விடுவார் களா? முடிந்தால் நமது வீடு களுக்கு அவர்களை அழைத்து வந்து சாப்பாடு கொடுக்கலாம், அப்படி கொடுத்தாலும் அவர் கள் தூய்மை அடைந்து விடு வார்கள் என்று சொல்வதற்கு இல்லை. நான் தாழ்த்தப்பட்ட மக்களை எங்கள் வீட்டிற்கு அழைத்துவந்து அவர்களுக்கு உணவு கொடுக்கிறேன், இது ஒரு உதவி மனப்பான்மை ஆகும். இதனால், அவர்கள் தூய்மை அடைந்துவிட்டனர் என்று சொல்வதற்கில்லை'' என்று கூறினார்.

இதுகுறித்து அவர் போபா லில் ஒரு பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டபோது ஊடகவியலாளர்கள், இதுவரை நீங்கள் ஏன் தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டில் சாப்பிடச் செல்லவில்லை என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், நான் எங்கு சாப்பிடவேண்டும், ஏன் சாப்பிடவேண்டும் என்பது எனது தனிப்பட்ட உரிமை, நான் தாழ்த்தப்பட்ட மக்களின் வீட்டில் போய் சாப்பிடுவதால் அவர்களுக்கு எந்த ஒரு பயனும் ஏற்படாது. அதனால் மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களை மதிப் பார்கள் என்ற எண்ணமும் எனக்கு ஏற்படவில்லை, வேண் டுமென்றால் அவர்கள் என் வீட்டிற்கு வந்து சாப்பிடட்டும், அதைத்தான் நான் சமூக வலை தளத்திலும் கூறினேன்'' என்றார்.   பாஜகவினர் கடந்த சில ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்களை ஈர்க்கும் விதத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீட் டில் சாப்பிடும் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். 22.4.2018- அன்று உ.பி. முதல் வர் சாமியார் ஆதித்யநாத் உத்திரப்பிரதேசத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட ஒருவர் வீட்டில் சென்று சாப்பிட்டார். அப்படிச் சாப்பிடும்போது பார்ப்பனர்கள் வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவு பார்ப்பனர்கள் வீட்டுப் பாத்திரத்தில் பரிமாறப்பட்டது. அதேபோல் முதல்வருடன் வந்த பாஜக பிரமுகர்கள் மற் றும்அரசுஅதிகாரிகளும்தங் களின் வீட்டிலிருந்தே சாப்பா டும், தட்டும் கொண்டு வந்திருந் தனர்.   இந்த நிலையில் பாஜகவி னரின் உண்மை மனநிலையை மத்திய அமைச்சர் உமாபாரதி வெளிக்கொண்டு வந்துவிட்டார்.   இதேபோன்றுதான்குஜ ராத்தில்முதல்வராகஇருந்த போதுமோடியும்கூறியிருந் தார்.ஒருவர் தாழ்த்தப்பட்ட மக்களின் வீட்டில் சாப்பிடுவதால் தாழ்த்தப்பட்டவர்கள் புனித' மாகி விடமாட்டார்கள். அவர்கள் (தாழ்த்தப்பட்டவர்கள்) தங் களுக்கு இட்ட பணியினை ஒழுங்காகச் செய்தாலே போது மானது'' என்று கூறியிருந்தார்.  இதையே தனது கர்மயோக்' என்ற நூலிலும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.    மோடி மட்டுமல்ல; காந்தியார் தனது குஜராத்தி மொழி நாளிதழில், வண்டி ஓட்டியும், வண்டியில் பயணம் செய்பவர்களும், குதிரைக்கு புல் அறுத்துப் போடுபவர்களும் ஒரே இடத்தில் இருந்தால் வண்டி ஓடாது. அவரவர்களுக்கு என்று இருக்கும் தொழிலை சரிவரச்செய்வதே புனிதமாகும் என்று குறிப்பிட்டிருந்தார். இதை அண்ணல் அம்பேத் கர், காந்தியாரிடமே சுட்டிக்காட் டியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner