எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* திருப்பதிக்குப் பைக்கில் செல்ல ஹெல்மட் கட்டாயம். (ஏழுமலையான் காப்பாற்ற மாட்டான் - ஹெல்மட்தான் காப்பாற்றும் என்று ஒப்புக்கொள்கிறார்கள்).

* பணி ஓய்வு பெற்ற ஓட்டுநரை தானே காரை ஓட்டிச் சென்று அவர் வீட்டில் விட்டு வந்தார் கரூர் மாவட்ட ஆட்சியர்!

(பண்பாட்டின் கனிந்த நிலை!).

* நாடு முழுவதும் 20 எய்ம்ஸ் மருத்துவமனை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்.  (ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டும் வரவே வராது).

* காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தன்னிச்சையாக எதையும் செய்ய முடியாது - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

(ஆமாம், மாநில அரசின் கூட்டோடுதான் துரோகங்கள் நடந்து வருகின்றன.).

* பேஸ்புக்கில் ட்ரம்ப்பைவிட மோடி இரு மடங்கு பிரபலம்.

(மக்கள் விரோத மனிதர்களில் யார் பிரபலம் என்பதற்கான அறிவிப்போ!).

* நீதிபதி கே.எம்.ஜோசப் பதவி உயர்வு முடிவை ஒத்தி வைத்தது கொலிஜியம்.

(அவர் ஜோசப்பாக இல்லாமல் சேஷாத்திரியாக இருந்தால் இந்தப் பிரச்சினைக்கெல்லாம் இடம் இல்லையே!).

* உரத்தநாடு வட்டம் வெங்கரையில் அம்பேத்கர் சிலை சேதம்.

(தமிழ்நாட்டிலும் பி.ஜே.பி.யின் பினாமி ஆட்சிதானே நடைபெற்று வருகிறது.)

* குடியரசுத் தலைவர் தலைமையில் கூட்டம் - 4 தென்மாநிலங்கள் புறக்கணிப்பு! (புறக்கணிக்காவிட்டாலும் விளைவு ஒன்றுதான்!)

* மத்தியப் பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடந்த வாக்காளர்ப் பட்டியலில் மரணமடைந்த 5,500 பேர்கள் - தேர்தல் ஆணையம் அதிர்ச்சி! (செத்தவர்கள் பிழைப்பது தேர்தலின் போதுதானே!)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner