எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழக முதல்வருக்கு நேரமில்லையாம்- குஜராத் முதல்வருக்கு மட்டும் நேரம் ஒதுக்கீடாம்!

புதுடில்லி, மே 4 காவிரி விவகாரம் பற்றி நேரில் பேச நேரம் கேட்ட தமிழக முதல்வர் பழனிச் சாமிக்கு பிரதமர் மோடி நேரம் வழங்கவில்லை. ஆனால் குஜராத் முதல்வர் சந்திக்க அவர் நேரம் ஒதுக்கியுள்ளார். டில்லியில் அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. இதற்காக எல்லா மாநில முதல்வர்களும் டில்லி சென்றனர். மோடி தலைமை தாங்கி நடந்து முடிந்த இந்தக் கூட்டத்தில்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கலந்துகொண்டார். இந்நிலையில் காவிரி பிரச் சினை குறித்து மோடியிடம் விவாதிக்க தமிழக முதல்வர் நேரம் ஒதுக்க கேட்டு இருந் தார். தமிழக முதல்வரை சந் திக்க பிரதமர் மோடி நேரம் ஒதுக்கவில்லை. அதே நேரத் தில், குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானிக்கு மட்டும் நேரம் ஒதுக்கி சந்தித்துப் பேசினார் மோடி. அப்போது குஜராத் மாநில தொழில்துறை தொடர்பாக துறைமுகங்களை தனியாருக்குவழங்கும் சில பிரச்சினைகளைப்பற்றி விவா தித்ததாக தெரிகிறது.

காவிரி விவகாரம் போன்ற முக்கியமான பிரச்சினையைப் பற்றி பேசுவதற்கு நேரம் ஒதுக் காத மோடி, தனியார் கையில் துறைமுகங்களை கொடுப்பது குறித்துப் பேச நேரம் ஒதுக்கி பேசியிருப்பது தமிழகத்து மக்களின் உணர்வை மதிக்காத நிலையையே காட்டுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner