எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பா.ஜ.க.நாடாளுமன்ற உறுப்பினர் சாவித்திரிபாய் புலே

லக்னோ,மே4தாழ்த்தப்பட்டவர்களின்வீட்டில்சாப்பிடுகிறோம்என்றுகூறிகடந்த சிலநாள்களாகதொடர்ந்துஅவர்களை அவமானப்படுத்தும்செயலைஉ.பி.சாமி யார் முதல்வர் முதல் பாஜகபிரமுகர்கள் வரை அனைவரும் தொடர்ந்து செய்து வருகின்றனர். இது தாழ்த்தப்பட்ட மக்களை அவமானப்படுத்தும் செயல் என்று பயிரச் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சாவித்திரிபாய் புலே கூறியுள்ளார்.   மத்திய அமைச்சர் உமாபாரதி, நான் தாழ்த்தப்பட்டவர்களின் வீட்டில் சென்று சாப்பிடுவதால் அவர்கள் புனித'மாகி விடு வார்களா?'' என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதேபோல் உத்தரப்பிரதேச தொழி லாளர் நலத்துறை அமைச்சர் அலிகார் மாவட்ட பாஜகபிரமுகர் வீட்டிற்கு சென்று சாப்பிட அமரும் போது அவர் தாழ்த்தப் பட்டவர் என்று தெரிந்தவுடன் அவரது வீட்டு உணவைச் சாப்பிட மறுத்தார். அமைச்சரும், அவருடன் வந்த இதர பாஜக பிரமுகர்களும் சாப்பிடாமல் வெளியே சென்றால் பிரச்சினையாகிவிடும் என்று தெரிந்துகொண்டு வெளியில் இருந்து சாப்பாடு வாங்கி வந்து உண்டனர். இதற்கு விளக்கம் கொடுத்த அமைச் சர், அவர்கள் வீட்டில் சாப்பாடு முடிந்து விட்டதால் நாங்கள் வெளியில் வாங்கிச் சாப்பிட்டோம். இதில் எந்த ஒரு உள் நோக்கமும் இல்லை'' என்று கூறிவிட்டுச்  சென்றார்.

உ.பி.சாமியார் முதல்வர் ஆதித்யநாத் வடஉத்தரப்பிரதேசம்மாநிலத்தில் சுற்றுப்பயணத்தின்போதும் தாழ்த்தப்பட்ட வர் வீட்டில் சாப்பிடுகிறேன் என்று கூறி அவர்களது வீட்டில் சாப்பிடாமல் அவர் வெளியில் இருந்து வந்த உணவை சாப்பிட்டார். இதுதொடர்பாக அவரது உதவியாளர்களிடம் கேட்ட போது முதல்வர் மதம் தொடர்பான விரதத்தில் இருப்பதால் அவரது விரத உணவை வெளியில் இருந்து தான் வாங்கிவரமுடியும். ஆகவே முதல்வர் உணவை வெளியில் இருந்து கொண்டுவந்து சாப்பிட்டார் என்று ஒரு விளக்கத்தைக் கொடுத்தனர். இது தொடர்பாக மாயாவதி கூறும்போது,

தாழ்த்தப்பட்டவர் வீட்டில் சாப்பிட் டால் தீட்டாகிவிடும் என்ற தீண்டாமை மனநிலையிலேயே இவர்கள் இவ்வாறு நடந்து தாழ்த்தப்பட்ட மக்களை அவமானப் படுத்துகின்றனர் என்று கூறினார்.  இந்த நிலையில் பயிரச் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சாது சாவித்திரிபாய் புலே நான்பாரா என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கூறியதாவது: சில நாள்களாக தொடர்ந்து தாழ்த்தப் பட்டவர்கள் வீட்டில் உணவு உண்கிறேன் என்று கூறி தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார்கள்.டாக்டர்பாபாசாகிப்பீம் ராவ் அம்பேத்கர் எப்போதும், யாரிடமும் பேதம்பார்த்ததில்லை.முதல்வரும், அவரது அமைச்சரவை சகாக்களும் தாழ்த் தப்பட்டவர்களை காட்சிப் பொருள்களாகப் பார்க்கின்றனர். அவர்கள் மனிதர்கள்தானே, கூண்டிற்குள் அடைக்கப்பட்ட காட்சி விலங்குகள் அல்லவே, ஏன் அவர்களை தொடர்ந்து அவமானப்படுத்துகிறீர்கள்?   தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன வசதிகள் செய்து கொடுத்திருக்கிறீர்கள், எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தந்திருக்கிறீர்கள். நாடாளுமன்றத்தில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் நானும்ஒருவர். ஆனால்,என்னைதனி யாக தாழ்த்தப்பட்ட சாமியார் நாடாளுமன்ற உறுப்பினர் என்று அடையாளமிட்டு அழைக்கிறார்கள். ஒருவர் தாழ்த்தப்பட்ட மக்களின் வீட்டில் சாப்பிடுவதுபோல் நாடகமாடுகிறார்; உடனே ஊடகங்கள் அனைத்தும் அவர் செயல்குறித்து ஏதோ பெரும்பயனான செயல் ஒன்றைச் செய்து விட்டதாக கூறி புகழாரம் சூட்டுகின்றன. உண்மையில் இது தாழ்த்தப்பட்டமக்களுக்கு கிடைத்த அவமானமாகும். இது அவர்களது தன்மானத்திற்கு கிடைத்த இழுக்கு ஆகும். எந்த ஒரு தாழ்த்தப்பட்ட மக்களும் எங்கள் வீட்டிற்கு வந்து சாப்பிடுங்கள் என்று அழைக்கவும் இல்லை. அப்படி வந்து நாடகமாடுவதை விரும்பவுமில்லை'' என்று கூறினார்.  தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை முதல்வர் அவமானப்படுத்தியதால் தொடர்ந்து மூன்று தாழ்த்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கள் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதைத் தொடர்ந்து இவர் பகிரங்கமாகவே பொதுக்கூட்ட மேடையில் தனக்கு ஏற்பட்ட அவமானம்  குறித்து பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner