எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 4  எம்பிபிஎஸ், ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இத்தேர்வுகள் மே 6- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடை பெறவுள்ளன. இதில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்திலிருந்து ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வு எழுதவிருக்கும் நிலையில், சென்னை, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தேர்வு மய்யங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால், அனுமதிக்கப்பட்ட இடங்களைவிடஅதிகமாண வர்கள் தேர்வு எழுத இருப்ப தால், சுமார் 200--க்கும் மேற் பட்ட மாணவர்களுக்கு கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மய்யம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்டவழக்கில், கூடு தல் மய்யங்களை ஏற்படுத்தி தமிழக மாணவர்கள் அனைவ ரும்தமிழகத்திலேயேதேர்வு எழுத நடவடிக்கை எடுக்கு மாறு நீட் தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ--க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த உத்த ரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. தமிழகத்தில் கூடுதல் நீட் தேர்வு மய்யம் அமைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

அத்துடன்மாணவர்கள்அவ ரவருக்கு ஒதுக்கப்பட்ட மாநி லங்களுக்குச் சென்று தேர்வு எழுதவும் உத்தரவிட்டது. இது மாணவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியாக அமைந்தது.

தேர்வுக்கு இன்னும் இரு நாள்களே உள்ள நிலையில், பிற மாநிலங்களுக்குச் சென்று, தேர்வு எழுதுவதற்கான ஏற் பாடுகளை மாணவர்களும், பெற்றோர்களும் உடனடியாக எப்படி மேற்கெள்வது என குழப்பத்தில் உள்ளனர்.

குறிப்பாக கிராமப்புறங்களி லிருந்து தேர்வு எழுதவிருக்கும் ஏழைமாணவர்களுக்கு இந்த அறிவிப்பு இடியாக அமைந்தது. இதையடுத்து தற்போது அடுத்த அதிர்ச்சியை சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அளித்துள்ளது. அதாவது நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் மய்யங் களுக்கான நுழைவுச் சீட்டு களை உடனடியாக லீஜீ://நீதீமீஸீமீமீ.ஸீவீநீ.வீஸீ என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என முன்னதாக அறிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து இதுவரை தேர்வுமய்யசீட்டுகளைஉட னடியாக பதிவிறக்கம் செய்யா தோர் லாக் இன் பக்கம் காலா வதியாகிவிடும்என்பதால் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறி வுறுத்தப்பட்டுள்ளது.  இதற்கு முன்பாக தமி ழக அரசு உடனடியாக நீட் தேர்விற்கான மய்யங்களை தமிழகத்தில் திறக்கலாம் என்று சமூக ஆர்வலர்களும், கல்வி யாளர்களும் கோரிக்கை வைத் திருந்தனர். ஆனால், உச்சநீதி மன்றம் மீண்டும் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவில் மண் அள்ளிப் போட்டு விட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner