எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அலிகார் பல்கலை.யில் மாணவர்கள்மீது  தாக்குதல்

அலிகார், மே 4 அலிகார் முசுலீம் பல்கலைக் கழகத்தில் மாணவர் அரங்கத்தில் முகம்மது அலி ஜின்னா படம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அப்படத்தை அகற்றுவதாகக் கூறிக்கொண்டு பல்கலைக் கழகத்தின் வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களை இந்துத்துவா கும்பலைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர்.

ஹிந்து யுவ வாகினி அமைப்பு அத்துமீறல்

ஹிந்து யுவ வாகினி என்கிற சங் பரிவார அமைப்பு முகம்மது அலி ஜின்னா படம் அலிகார் பல்கலைக்கழகத்தில் இருப்பதா? என்று வன்முறை வெறியாட்டத்தைத் தொடங்கியுள்ளது. முகம்மது அலி ஜின்னா படத்தை அகற்றுவதற்கு 48 மணி நேர கால அவகாசத்தை அளித்து அலிகார் மாணவர்கள் சங்கத்துக்கு ஹிந்து யுவ வாகினி அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. நேற்றுமுன்தினம் (2.5.2018) பல்கலைக் கழக வளாகத்துக்குள் ஹிந்து யுவ வாகினி அமைப்பினர் அத்துமீறி நுழைந்து முகம்மது அலி ஜின்னா படத்தை அகற்றுவதற்காகச் செல்ல முயன்றார்கள்.

இந்துத்துவ வலதுசாரி வன்முறைக்கும் பலுக்கும், மாணவர்கள் சங்கத்தினருக்கும் இடையில் மோதல், வன்முறை வெடித்தது. பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட காவல் துறையினர் கூட்டத்தினரைக் கலைந்து போகச் செய்வதற்காக கண்ணீர்புகைக் குண்டுகளை வீசினார்கள். பின்னர் தடியடி நடத்தினார்கள்.காவல்துறையினரின்தடி யடியில் மாணவர்கள் படுகாயமடைந்தார்கள்.

மாணவர்களைத் தாக்கினார்கள்

ஹிந்து யுவ வாகினி, ஹிந்து ஜாக் ரான் மஞ்ச், ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பாகிய ஏபிவிபி உள்ளிட்ட சங் பரிவார அமைப்பினர் மாணவர்களைத் தாக்கினார்கள்.

திட்டமிட்டு சங் பரிவார வன்முறைக் கும்பல் பல்கலைக் கழகத்தின் நுழைவு வாயிலில் பகல் நேரத்திலேயே நுழைய முற்பட்டனர். காவல்பணியாளர்கள் தடுத்து நிறுத்தினார்கள். சங் பரிவார கும்பலை எதிர்த்து, அவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்த  மாணவர்கள் முயன்றார்கள். மாணவர்களை சங் பரிவார கும்பல் தாக்கத் தொடங்கியது.

தடியடி, துப்பாக்கிச் சூடு

காவல்துறையினர் நிகழ்விடத்துக்கு சென்று, தடியடி, துப்பாக்கிச் சூடு நடத் தினார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டிருந்த நிலையில், மாணவர்கள்மீது காவல்துறையினர் கண் ணீர்புகைக் குண்டுகளை வீசினார்கள். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சத்தீஷ் கவுதம் மற்றும் சங் பரிவாரக்கும்பலின்மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினார்கள்.

உத்தரப்பிரதேச மாநில காவல்துறை டிஜிபி ஓ.பி.சிங் கூறியதாவது:

நிலைமை மோசமாவதைத் தடுத்து நிறுத்துவதற்காக,மாணவர்களைகலைந்து போகச் செய்வதற்காக போதுமான காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பல்கலைக்கழக வளாகம் முழுவதும் அதிரடிப் படையினர் மற்றும் மூத்த காவல் துறை அலுவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சிலரை சுற்றி வளைத்தோம் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner