எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* பாடகர் கோவன், மாணவி வளர்மதி ஆகியோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுத்த காவல்துறை (தமிழ்நாடு அரசு) பத்திரிகையாளர்களான பெண்களை மிகக் கீழ்த்தரமாக விமர்சித்த எஸ்.வி.சேகர்மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் ஏன்? - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி. (எல்லாம் வருண தர்மம்''தான்).

* கழிவறைத் தண்ணீரில் டீ தயாரித்த இரயில்வே ஒப்பந்தக்காரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்

(28 சதவிகிதம் மலக்கழிவு; 40 சதவிகிதம் மூத்திரக் கழிவான மகாமகக் குளத்தில் குளிக்க அனுமதி அளித்த அரசுக்கு என்ன தண்டனை கொடுப்பது?).

* மெலட்டூர் அருகே கோவில் திருவிழாவில் மோதல்.  (ஆமாம் - மதம் நல்லிணக்கத்தை உருவாக்கும் - நம்பித் தொலையுங்கள்!).

* தமிழக மாணவர்களுக்கு வெளிமாநில மய்யங்களில் நீட் தேர்வு மய்யங்களில் மாற்றம் இல்லை - உச்சநீதிமன்றம் ஆணை

(நமது மாநிலத்துக்குரிய இடங்களை அபகரித்துவிட்டு, வெளிமாநிலங்களுக்குச் சென்று நமது மாணவர்களைத் தேர்வு எழுதச் சொல்லும் ஒரு மன்றத்திற்கு நீதிமன்றம் என்ற பெயரா? சமூகநீதியைக் கொல்லைப்புறம் வழியாக ஒழிக்க சதி!).

* மேற்கு வங்கத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை சேதம்!

(சிலை என்றால் வில்' என்றும் பொருளுண்டு. வில்லங்கத்தில் மாட்டிக்கொள்ள வேண்டாம் வீணர்கள்!).

* இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பம். (பெண்களுக்கு இருந்த தாடி மீசையைப் பொசுக்கினதாகப் புராணம் கூறும் அந்த அக்னிப் பகவானா?).

* அரியானாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 17 வயது சிறுமி தற்கொலை.

(பெண்ணுக்கு மான உணர்ச்சி இருக்கிறது - பா.ஜ.க. ஆட்சிக்கு அதுதான் இல்லையே - என் செய்வது!).

* காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் நமக்கு வெற்றி கிடைக்கும். - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

(நாளைக்கு உனக்கு உணவு கிடைக்கும். இன்று நீ செத்துப் போ!' என்பது எடப்பாடி சாமிகளின் அருள்வாக்கோ!)

* தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது - அமைச்சர் சி.வி.சண்முகம் (அப்பாடா! ஓர் அமைச்சர் துணிச்சலாக இப்படி சொல்லியிருக்கிறார். துணிச்சல் திலகம்' என்று பட்டமளிக்கலாம்.)

* எஸ்.சி., எஸ்.டி.,க்கு 100 சதவிகிதம் நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். - உச்சநீதிமன்றம்

(வாய் வார்த்தையில் இப்படி இருக்கிறது. எழுத்தில் அப்படி இல்லையே! உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்டவர் நீதிபதியாக இருக்கிறாரா?)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner