எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நடிகர் பிரகாஷ்ராஜ்

பெங்களூரு, மே 5 -மோடி மிகப்பெரிய ராட்சசன்', அவரையும், பாஜக-வையும் ஆட்சியை விட்டும், இந்தியாவை விட்டும் அகற்றுவதே தன்னுடைய குறிக்கோள் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பெங்களூருவில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கவுரி லங்கேஷின் மரணம் என்னை மாற்றியதா? என்றால், ஆம் கவுரி மரணம் என்னை மாற்றியது. மாற்றியது என்பதை விட என்னை உலுக்கியது. அவர் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தார். அவரின் குரல் அடங்கியபோது, அது என்னைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கியது. நாம் எல்லோரும் அவரை தனியாக போராட வைத்துவிட்டோம். இப்போது நான் பேச ஆரம்பித்துள்ளேன். ஆனால், என் குரலை இப்போது நிறுத்தப் பார்க்கிறார்கள். இதை செய்வது வேறு யாரும் இல்லை.பாஜக மட்டும்தான். மோடியிடம் நீங்கள் கொடுத்த வாக்குறுதி என்ன ஆகிவிட்டது என்று கேட்டால், உடனே அவர் நேருவை பற்றி பேசுகிறார்; திப்புசுல்தான் பற்றி பேசுகிறார்; 100 ஆண்டு களுக்கு முன்பு நடந்ததை பேசுகிறார். இந்த 4 ஆண்டுகள் என்ன நடந்தது என்று பேசுவது இல்லை. நான், ஏன் என் தாத்தா காலத்தில் நடந்ததை வைத்து இவருக்கு ஓட்டுப் போட வேண்டும்? மோடி எவ்வளவு பேசினார், ஆனால் என்ன செய்தார்? நான் மோடிக்கு எதிராக பேசினால் உடனடியாக என்னை பாகிஸ்தான் போக சொல்கிறார்கள். அங்கு தீவிரவாதமும், வறுமையும் இருக்கிறது என்கிறார்கள். நான் சொல்கிறேன், அங்கே மதம்தான் அரசியலை தீர்மானிக்கிறது. ஒரு மதம் நாட்டை ஆண்டால், இப்படித்தான் பாகிஸ்தான்போல இந்தியாவும் ஆக வேண் டும் என்றுதான் பக்தாக்கள் விரும்பு கிறார்கள்.

நான் மோடிக்கு எதிராகப் பேசியதற்கு பின் எனக்கு பாலிவுட்டில் வாய்ப்பு கொடுக்கவேயில்லை. நெருங்கிய நண்பர் கள்கூட விலகிச் சென்று விட்டார்கள். தென்னிந்திய படங்களில் மட்டும்தான் வாய்ப்பு கொடுக்கிறார்கள்.

நான் அரசியலுக்கு வந்துவிட்டேனா என்று கேட்கிறார்கள். ஆம் நான் அரசிய லுக்குவந்துவிட்டேன்தான். நான் இப்போது அரசியல்வாதிதான். நான் ஒன்றும் தேர்தலில் நிற்கப் போவது இல்லை. நான்அரசியல் கட்சி தொடங்க போவதில்லை. நான் எம்எல்ஏ ஆகப் போவதில்லை. இப்போது இருக்கும் பெரிய அசுரன்' பாஜக-தான், அவர் களை வீழ்த்துவதுதான் என் லட்சியம். அதுதான் என் அரசியல்.

இவ்வாறு நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner