எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 5 இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள குடி யரசுத் தலைவர் நேற்று வேலூரில் சிஎம்சிமருத்துவக்கல்லூரிவிழா வில் பங்குகொண்டார். அதைத் தொடர்ந்து நாராயணி பீடம் நிகழ்ச் சியிலும் கலந்துகொண்டார். இன்று சென்னையில் பல்வேறு நிகழ்ச்சி களில் கலந்துகொள்ள உள்ளார்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு இதுவரை  ஒப்புதல் அளிக்காத குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகத்துக்கு வருகை தந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரசு மருத்துவர்கள் இன்று கருப்புப் பட்டை அணிந்து  பணிக்குச் செல்வதாக அறிவித்து உள்ளனர்.

மேலும்,  நீட் தேர்வுக்கு விலக்கு, முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சத வீத இடஒதுக்கீடு கிடைக்கும் வரை மத்திய அரசு பிரதிநிதிகள் யாரையும் தமிழகத்தில் நடக் கும் விழாக்களுக்கோ, பிற கூட்டங் களுக்கோ அழைப்பதைத் தமிழக நலனில் அக்கறை கொண்ட யாவ ரும் தவிர்க்க வேண்டும் என்றும்  கோரியுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner