எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 


கணியூர், மே 6 திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் திராவிட மகளிர் எழுச்சி மாநாடு தாராபுரம் கழக மாவட்டம் கணியூரில் ஏ.ஆர்.சி மகாலில் ‘தாராபுரம் வ.துளசி யம்மாள்' நினைவரங்கத்தில் திராவிட மகளிர் எழுச்சி மாநாடு இன்று (6.5.2018) காலை தொடங்கி வரலாறு காணாத அளவில் மாபெரும்  எழுச்சியுடன் நடைபெறுகிறது.

கோவை, உடுமலைப்பேட்டையை அடுத்த தாராபுரம் கணியூரில் காணும் இடமெல்லாம் கருப்பு சேலைகள், கருப்புடை தரித்த மகளிர் என நகரமே கருங்கடலாகக் காட்சியளித்தது. திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டில் பெண்கள் மட்டுமல்லாமல், பெரியார் பிஞ்சுகள், கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக பெருந்திரளாக கலந்துகொண்டனர். நகர்முழுவதும் கழகக் கொடிகளின் தோரணங்கள், சாலையின் இருமருங்கிலும் கழகக் கொடிகள் மாநாட்டின் எழுச்சியை பறைசாற்றின. திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டின் விளம்பரப் பதாகைகள், தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை வரவேற்கின்ற பதாகைகள் கணியூருக்கு சிறப்பு சேர்த்தன.

மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு திண்டுக்கல், பழனி, மடத்துக்குளம் கணியூர்வரை வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாநாடு தொடக்கம், கருத்தரங்கம்

காலை 9 மணியளவில் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக பெரியார் பிஞ்சுகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

காலை 10 மணிக்கு கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தலைமையில் கருத்தரங்கம் தொடங்கியது. கோவை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய அமைப்பாளர் வ.இராஜேஸ்வரி வரவேற்புரையாற்றினார். மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி தொடக்க உரையாற்றினார். ‘பெண்ணினம் விடுதலை பெற மூடநம்பிக்கைகளை ஒழிப்போம்' எனும் தலைப்பில் கோவை இரா.அன்புமதி, ‘பொதுவாழ்வில் அதிகம் இடம்பெறுவோம்' எனும் தலைப்பில் வேலூர் தே.அ.ஓவியா அன்புமொழி, ‘பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்போம்' எனும் தலைப்பில் கோவை செ.அன்புமணி, ‘ஜாதி வெறி ஆணவக் கொலைகளைக் கண்டிப்போம்' எனும் தலைப்பில் கோவை தி.ச.யாழினி ஆகியோர் கருத்தரங்க உரையாற்றினார்கள். தாராபுரம் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கி.சரஸ்வதி நன்றி கூறினார்.
பெரியார் பிஞ்சுகளின் தனித்திறமைகள் பல்சுவை நிகழ்ச்சிகள்

பிற்பகல் 2 மணிக்கு பெரியார் பிஞ்சுகளின் தனித்திறமைகள், பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  மாநில கலைத்துறைச் செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்தார்கள்.

வேறு எந்த ஓர் அமைப்புக்கும் இல்லாத சிறப்பு திராவிடர் கழகத்துக்கு உள்ளது என்றால், கொள்கை வித்துகளாக பெரியார் பிஞ்சுகள் வார்த்தெடுக்கப்படுவதுதான். பெரியார் பிஞ்சுகளுக்கான பழகுமுகாம் நடத்தப்படுகிறது. மாநாட்டில் பெரியார் பிஞ்சு களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் பெரியார் பிஞ்சுகளே பங்கேற்கின்ற சிறப்பு திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டின் சிறப்புகளில் ஒன்றாகும்.

கழகத் தலைவர் ஆசிரியர், துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் பார்வையாளர்களின் வரிசையில் அமர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகளை கவனித்தார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner