எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குத் தங்கம், வெள்ளி யென்று எத்தனையோ பொருள்களை வழங்கி மகிழ்ந்த தமிழ்நாட்டு மக்கள், திராவிடர் கழகத் தோழர்கள் தாராபுரம் அடுத்த - இயக்க வரலாற்றில் முக்கிய இடம்பெற்ற கணியூரில் நடைபெற்ற திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டில் 13 வகைப் பொருள்களைக் கொடுத்து மகிழ்ந்தனர்.

எடை மேடையில் தமிழர் தலைவர் அமர்த்தப்பட்டு, 13 வகைப் பொருள்களை மக்கள் வெள்ளத்தின் ஆரவாரத்திற்கிடையே அளித்து வரலாறு படைத்தனர். இதன் மதிப்பு, ரூ.76,000 ஆகும்.

தந்தை பெரியார் தன்னிடம் கொடுக்கப் பட்ட ஒவ்வொரு காசையும் முடிச்சுப் போட்டு வைத்து மக்கள் நலனுக்குப் எப்படிப் பயன்படுத்தினாரோ, அதேபோல, இந்தப் பொருள்கள் எல்லாம் என்னுடைய வீட்டுக்குச் செல்லாது; இவை எல்லாம் இயக்கத்துக்கு, பொது நலனுக்குப் பயன்படுத்தப்படும் என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பொருள்கள் வழங்கியவர்களின் விவரம்:

1. நாணயம் - கணியூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள், மணியம்மாள், பொள்ளாச்சி

2. தேங்காய் - செந்தில்குமார், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்

3. கொய்யாப்பழம் - கணியூர் இராமசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர்

4. ஏ-4 பேப்பர் - திராவிடச்செல்வன், கோரிக்கடவு, பழனி ப.க. தலைவர்

5. வெல்லம் - தாராபுரம் வழக்குரைஞர் நா.சக்திவேல், மாவட்டச் செயலாளர், தாராபுரம்

6. டீத்தூள் - நீலமலை மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள்

7. அரிசி - நா.மாயவன், மாவட்ட இளைஞரணித் தலைவர்

8. சமையல் எண்ணெய் - பொள்ளாச்சி சி.மாரிமுத்து

9. பால்  - கணியூர் பழ.நாகராசன்

10. வாழைப்பழம் - கணியூர் ஆப்ரகாம் ராஜா

11. மாம்பழம் - பழனி பெ.இரணியன், மாவட்டத் தலைவர்

12. தேங்காய் - காங்கேயம் முத்துமுருகேசன், ஓய்வு பெற்ற ஆசிரியர்

13. பூண்டு - கணியூர் பெரியசாமி

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner