எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பறந்து சென்றார் லண்டனுக்கு வைத்தியம் பார்க்க  ஹி... ஹி....

யோகா குருவான பாபா ராம்தேவ் தனது மூட்டு அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றதாக  செய்திகள் வெளியாகியுள்ளன. யோகா மூலம் புற்றுநோ யைக்கூடக் குணப்படுத்தலாம் எனக் கூறும் பாபா ராம்தேவ்தான் தற்போது சமூக வலைதளங்களில் மக்களின் நகைச்சுவைப் பொருளாக மாறி யுள்ளார்.

"பாபா ராம்தேவ் தனது மூட்டு அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளதால் பக்தர்களே சற்று ஓய்வெடுங்கள். நவீன மருத்துவம் மூலம் அவர் குணமடைந்து, மீண்டும் வந்து யோகா மூலம் சொல்லிக் கொடுப்பார்." "பதஞ்சலி சூரணங்கள், லேகியங்கள் மூலம்  உங்கள் மூட்டு வலியை குணப் படுத்த முடியவில்லையா?"

"எனது பக்கவாத நோயைக்கூட யோகாவால் குணப்படுத்தினேன் என்று கூறிய ஒரு மனிதர், தற்போது மூட்டு வலி சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார். எதில் தவறு நடந்தது பாபாஜி? உங்கள் யோகாவிலா? அல்லது சூரணங் களிலா?" என்று டிவிட்டரில் பலர் தங்களது கருத்துகளை கிண்ட லாகப் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner