மன்னன், கடவுளே என்ற நம்பிக்கையை மக்களிடம் வலுவாகஏற்படுத்த,மன் னன்ஜொலிக்கும் வகையில் அலங்கரித்துக் கொள்ள வேண்டுமென்று விஷ்ணு, காத்யாயன ஸ்மிருதிகள் கூறியுள்ளன. மகாபாரதத்தின் சாந்திபர்வம், மக்கள் மன் னனை முழுமையாக நம்ப வேண்டுமென்றால் ஆடை அலங்காரம் திவ்யமாக இருக்கவேண்டும் என்கிறது (டாக்டர் பாலகோபால் அவர்களின் வகுப்புவாதத்தை எதிர்கொள்ள கருத்தாயுதம்' நூலின் 112 பக்கம்).
மோடி கருநாடக தேர்தலில் ஒவ்வோரு மேடைக்கும் புதுப்புது ஆடைகளை அணிந்து தோன்றுவார், சனிக்கிழமை 5.5.2018 அன்று மேற்கு கருநாடகாவில் ஒரே நாளில் மூன்று இடங்களில் பேசினார். மூன்று இடங்களிலும் புதுப்புது ஆடைகளுடன் மேடையேறினார். ஏற்கெனவே அவர் 2015 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்த போது அவர் அணிந்த ஆடையின் மதிப்பு பத்து லட்சமாக இருந்தது. சமீபத்தில் லண்டன் சென்ற போது 15 நிமிட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு மட்டும் அவர் அணிந்த ஆடையின் விலை 1,700 யூரோ (ரூ.ஒரு லட்சத்து 13 ஆயிரம்) மதிப்புள்ள ஆடை அணிந்திருந்தார். மோடி கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தில் இப்படி ஆடம்பர ஆடைகள் தினம் தினம் படாடோபமாக அணிகிறார். அதற்கும் இந்த பார்ப்பன தர்மசாஸ்திரங்கள்தான் வழிகாட்டுகிறதோ?