எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 10 நாடு முழுவதும் மே 6 -ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் தமிழ் வினாத்தாளில்தவறானமொழி பெயர்ப்புமற்றும்பிழையுடன் 49 கேள்விகள் இடம்பெற்றுள்ள தாக 'டெக் ஃபார் ஆல்' எனும் அறக்கட்டளை குற்றஞ்சாட்டி யுள்ளது.

இதுதொடர்பாக, இந்த அறக்கட்டளையின் நிறுவனர் ஜி.பி.ராம்பிரகாஷ் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன் கிழமை கூறியதாவது:

நீட்தேர்வில்இயற்பியல், வேதியியல்,உயிரியல்(தாவர வியல், விலங்கியல்) பாடங் களில் இருந்து 180 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இவற் றில், தமிழ் மொழி வினாத்தாளில் இடம்பெற்றிருந்த 49 கேள்விகள் தவறான மொழிபெயர்ப்பு மற் றும் பிழைகளுடன் இருந்தன. உதாரணமாக செங்குத்து என்பது 'நேர்குத்து' எனவும், சிறுத்தையின் என்பதற்கு 'சீத்தாவின்' என்றும் தவறாக இடம்பெற்றிருந்தன. இதேபோன்று, இயல்பு மாற்றம் என்றிருக்க வேண்டியது 'இயல்மாற்றம்' எனவும், தாவ ரங்கள் என்பது 'பிளாண்டே' என்றும், பழுப்பு என்பது 'பழப்பு' என்றும் பிழையுடன் இடம்பெற்றுள்ளன. இவை தவறான பொருளைக் கொடுக் கின்றன.

மதிப்பெண் அளிக்கப்படுமா?

நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 180 கேள்விக்கு 720 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.49கேள் விகள் பிழைகளுடன் இடம் பெற்றிருப்பதால், அந்த 49 கேள்விகளுக்கு 196 சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும். இதனை தமிழக முதல்வர் மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கவனத்துக்குக் கொண்டு செல்ல இருக்கிறோம். நீட் தேர்வுக்கான பாடத் திட்டங்களைஅளிக்கும்என்சி இஆர்டி புத்தகங்கள் தமிழ் மொழியில் இல்லை. அத னால்தான் மொழிபெயர்ப்பு செய்வதில்சிபிஎஸ்இதவறு செய்துள்ளது.தமிழ் மொழியில் என்சிஇஆர்டி புத்தகங்களை வெளியிடவேண்டும்.இனிவரும் ஆண்டுகளில் இது போன்ற பிழைகள் ஏற்படாமல் இருக்கத் தேவையான நட வடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

  

இந்நாள்...இந்நாள்...

1921  -     நீதிக்கட்சி அரசு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாள்

1930  - ஈரோட்டில் 2 ஆவது மாகாண சுயமரியாதை மாநாடு (இரண்டாம் நாள்)

2000  - திராவிடர் கழகம் சார்பில் அர்ச்சகர் உரிமைப் போராட்டம் (28 கோவில்கள் முன்பு)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner