எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மே 10 பண மதிப் பிழப்புநடவடிக்கைகுப்பிறகு ஏற்பட்டபொருளாதார இழப்பை ஈடுகட்ட வங்கிகள் ஏடிஎம் களின் எண்ணிக்கையை குறைத்துள்ளன.கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் ஆன 10 மாதங்களில் நூற் றுக்கணக்கான ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளன.  முன்பு 1,10,116 ஆக இருந்த ஏடிஎம்கள் தற்போது 1,07,630 ஆக குறைக்கப்பட்டுள்ளன. அதாவது 2,486 ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளன. இதில் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிக ஏடிஎம்களை மூடி உள்ளது.

வங்கிக் கிளைகளுக்கு மக்கள் பணம் எடுக்க வருவதைக் குறைக்க ஏடிஎம்களை உப யோகப்படுத்த நிர்வாகம் வலி யுறுத்தியது. அதன் பிறகு செலவுஅதிகரிப்பதாகக்கூறி ஏடிஎம்களின் இலவச பரிவர்த் தனைகள் குறைக்கபட்டன. இப்போது அந்தந்த வங்கிகளின் ஏடிஎம்களில் மாதத்துக்கு 5 முறை, மற்ற வங்கி ஏடிஎம்களில் மாதத்துக்கு 3 முறைக்குமேல் எடுத்தால் பணப்பிடிப்பு செய் யப்பட்டு வருகிறது. இவ்வளவுஇருந்தும்பொரு ளாதார இழப்பை ஈடுகட்ட முடியாத காரணத்தால் எடிஎம்கள் இழுத்து மூடப்பட்டு வருகிறது. இதனால் வங் கியைநோக்கிசெல்லவேண் டியுள்ளது. இதனால் வாடிக்கை யாளர்களுக்குப் பணமும், நேரமும் அதிகம் செலவாகிறது. ஆனால், இது குறித்து நிதி அமைச்சகம் கூறும் போது டிஜிட்டல் பண பரிவர்த்தனை தொடர்பாகவே ஏடிஎம்கள் குறைக்கப்பட்டன என்று கார ணம் கூறியிருக்கிறது. 2018- ஆம் ஆண்டு துவக் கத்தில் இருந்து மெல்ல மெல்ல அதிகரித்து வந்த ரொக்கத் தட்டுப்பாடு, கருநாடகா தேர்தல் தேதி அறிவித்த பிறகு பணத் தட்டுப்பாடு மிகவும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில் ஏடிஎம்களும் மூடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரி வித்ததாவது:

ஏடிஎம்மூடப்படும்நட வடிக்கை என்பது வாடிக்கையா ளர்களுக்கு மேலும் இடர் தருவது மட்டுமின்றி, வங்கி ஊழியர்களுக்கும் பணியை அதிகரிக்கும் என வங்கி ஊழி யர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner