எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிங்கப்பூர், மே 11 கோவில்கள் கொள்ளைக்கூட்டத்தாரின் கூடாரம்என்பதுஉண்மைதான் என்பதற்கு அடையாள மாக சிங்கப்பூர்கோவிலிலும்நிதி முறைகேடு கண்டுபிடிக்கப்பட் டது.சிங்கப்பூர் சிராங்கூன் சாலையிலுள்ள வீரமாகாளியம் மன் கோவிலில், கடுமையான நிர்வாகச் சீர்கேடு நடந்திருப்ப தாகசிங்கப்பூர்தொண்டுநிறு வனங்களுக்கானநிதிக்கண் காணிப்புஆணையர்நடத்திய விசாரணையில் தெரியவந்துள் ளது. சிங்கப்பூர் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் கோவில் நிர் வாகத்தில் பல்வேறு குளறு படிகள் நடைபெற்று இருந்தது தெரியவந்தது. முந்தைய கோவில் நிர்வாகக் குழுத் தலைவர் ஆர். செல்வராசு, அறங்காவலரும், தற்போதைய நிர்வாகக் குழுத் தலைவருமான சிவகடாட்சம், அறங்காவலரும் தற்போதையநிர்வாகக்குழுச் செயலாளருமான ராதா கிருஷ்ணன் செல்வகுமார் -ஆகியமூவருக்கும்இந்தநிதி முறைகேட்டில்தொடர்புஇருப் பதாகவும் அவர்கள் சுயலாபத்திற் காக இந்த முறைகேடுகளை பொதுவெளியில்இருந்து மறைத் தனர் என்றும் விசாரணையில் தெரியவந்தது. கோவில் நிதியும் சொத்து களும்,இவர்களாலும்இதர கோவில் நிர்வாகிகளாலும் வரம்புமீறிகையாளப்பட்டிருப் பதாகவும் ஆணையர் குறிப் பிட்டுள்ளார். கோவில் உண்டியலில் பணத்தைச்செலுத்தாமல்குருக் கள் கையில் கொடுக்கச் செல் வது, காசோலைகள் கோவில் பெயரிடாமல்தருவதுபோன்ற நிகழ்வுகள்மற்றும்இப்படி கொடுக்கப்பட்ட காசோலை களை அவர்கள் தங்களது பெய ருக்கு மாற்றி அதை காசாக்கியதும் தெரியவந்துள்ளது. சுமார் ஒன் றரை மில்லியன் வெள்ளி மதிப்புள்ளகாசோலைகள்இவ் வாறுமுறைகேடாக மாற்றப் பட்டதாக அமைச்சக அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

இந்த முறைகேடு தொடர் பாக கோவில் தலைமைக் குருக்கள் உள்பட கோவில் நிர்வாகிகள் 6 பேர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர் கள்மீதுசட்டப்படியானநட வடிக்கைஎடுக்கஅமைச்சகம் பொருளாதார குற்றவியல் காவல் துறைக்கு ஆணையிட்டுள்ளது,  இதுதொடர்பானமேல் விசா ரணைகள் நடந்துவருகின்றன. இதன்மூலம் கோவில் நிர்வாகி கள் அனைவரும் கைதாகும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.  இது தொடர்பாக சிங்கப் பூரைச் சேர்ந்த சிவபிரபு என் பவர் கூறும்போது கடவுளின் பெயரால் பக்தியின் பெயரால் இவ்வாறு நடைபெறும் முறை கேடுகளைத் தடுக்கவேண்டும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை தரவேண்டும் என்று கூறினார்.

2018 ஆம் ஆண்டின் ஊழ லற்ற  நாடுகள் பட்டியலில் ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நிலையில், கோவிலில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதானது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner