எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சீருடையில் பிச்சை எடுக்க அனுமதிக்க வேண்டும் மகாராஷ்டிர முதல்வருக்கு காவலர் கடிதம்

மும்பை, மே 11 -சீருடையில் சென்று பிச்சை யெடுக்க அனு மதிக்குமாறு மும்பையைச் சேர்ந்த காவல்துறை காவலர் ஒருவர்,மகாராஷ்டிர மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள் ளார். மும்பையில் காவலராக இருப்பவர், தியானேஸ்வர் அஹிரோ. இவர், சிவசேனா தலைவர் உத்தவ்தாக்ரே இல் லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், இரண்டு மாதமாக தனக்குச் சம்பளம் வழங்கப்படாததால், தன்னை சீருடையில் பிச்சை யெடுக்க அனுமதிக்குமாறு அம் மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆளுநர் வித்யா சாகர் ராவ் மற்றும் காவல்துறை ஆணையர் தத்தா பட்சல்கிகார் ஆகியோருக்குக் கடிதம் எழுதி அதிர்ச்சி அளித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner