எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நொய்யல்,மே11 சேமங்கிபெரியார்நகரில் இருந்து கவுண்டன்புதூர் செல்லும் சாலையில் வசித்து வருபவர் தம்பிதுரை(வயது 50). விவசாயியான இவரது வீட்டின் அருகே இவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் கோம்புப்பாளையம் ஊராட்சி, பெரியார் நகரில் வசித்து வரும் பொதுமக்கள் வேலாயுதம்பாளையம்- நொய் யல் நெடுஞ்சாலை ஓரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விநாயகர் கோவில் கட்டியுள்ளனர். விநாயகர் கோவில் கட்டப்பட்ட இடம் நெடுஞ்சாலைதுறையின் பூங்கா அமைப் பதற்கு ஒதுக்கப்பட்ட இடமாக இருந்தது. இந்நிலையில் இரவு நேரங்களில் விநா யகர் கோவிலில் அப்பகுதியை சேர்ந்த வர்கள் மது அருந்தி விட்டு அருகில் இருந்த நிலத்தில் பாட்டில்களை வீசி செல் வதாகவும், மேலும் மது அருந்தியவர்கள் தகாத வார்த்தைகளால் பேசுவதால் தொடர்ந்து இடையூறு ஏற்படுவதாகவும்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில்விநாயகர்கோவிலையும்,ஆக் கிரமிப்பு செய்துள்ள இடத்தையும் அப் புறப்படுத்துமாறு தம்பிதுரை கடந்த மார்ச் மாதம் மனு தாக்கல் செய்திருந்தார்.

எதிர்ப்பு

தம்பிதுரையின்மனுமீதுநடவடிக்கை எடுத்துஆக்கிரமிப்புகளைஅகற்றுமாறு நெடுஞ்சாலைகரூர் உதவி கோட்டப்பொறி யாளர் ஈஸ்வரனுக்கு மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. 26.4.2018 அன்று மாலை  ஆக்கிரமிப் புகளை அகற்றுவதற்காக நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப்பொறியாளர் ஈஸ் வரன், உதவி பொறியாளர் செந்தில்நாதன் மற்றும் பணியாளர்கள், மண்மங்கலம் வட்டாட்சியர் கற்பகம், வருவாய் ஆய்வாளர் சுதா, கிராம நிர்வாக அலுவலர்கள் சரண்யா, பூபதி, கதிர்வேல் ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த இடத்திற்கு சென்றனர். அரவக்குறிச்சி காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் முத்தமிழ்ச்செல்வன், வேலாயுதம்பாளையம் காவல்துறை ஆய் வாளர் குருநாதன் மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆக்கிரமிப்புகளை இடிப்பதற்காக பொக் லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. முதலில் விநாயகர் கோவிலை இடிக்க அதிகாரிகள் முயன்றபோது, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் விநாயகர் கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வட்டாட்சியர், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் இணைந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உயர் நீதிமன்ற உத்தரவுபடி இடிப்பதாகவும், நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்க வேண்டும் என்றும் கூறினர். பொதுமக்கள் முதலில் புறம்போக்குநிலத்தில்ஆக்கிரமித்துகட்டி யுள்ள தம்பிதுரையின் வீட்டை முழு மையாக இடித்து விட்டு விநாயகர் கோவிலை இடிக்குமாறு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் முதலில் தம்பித்துரையின் வீடும் இடிக்கப்பட்டது. அதன் பின்னர் நெடுஞ்சாலைத் தார்ச் சாலையோரத்தில் இருந்த விநாயகர் கோவிலை பொக்லைன் எந்திரம்மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். விநாயகர் சிலையை நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான லாரி மூலம் கரூர் அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி 26.4.2018 அன்றிரவு 7.30 மணிவரை நடைபெற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner