எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது யாதெனில், ஜாமீனில் வெளிவர முடியாத கிரிமினல் செக்ஷன்கள் போடப்பட்ட ‘பிராமண சங்க' பிரமுகரும், அ.தி.மு.க. முதல் பா.ஜ.க. வரை பதம் பார்த்த அரசியல் கட்சிகளின் அரிதாரம் கலந்த அவதாரமான ‘மைலாப்பூர்' ‘மகாபாரத மங்காத்தாக்களின்' சிருஷ்டி கர்த்தா நடிகர் (24 மணிநேரமும்) ஆன எஸ்.வி.சேகர் என்பவரை போலீஸ் தேடுகிறது! தேடுகிறது! தேடிக்கொண்டே இருக்கிறது!

சென்னை உயர்நீதிமன்றமும் கடுமையாகக் கண்டிப்பதாலும், தமிழ்நாடு அரசு இருதலைக் கொள்ளி எறும்பாகி, எஸ்.வி.சேகரை வாய்க்கொழுப்பு, வக்கணையாளரைத் தேடுகிறது! தேடுகிறது, தேடிக் கொண்டே இருக்கிறது!

எல்லா அக்கிரகாரங்களிலும் நன்னா தேடுங்கோ! மைலாப்பூர் மடிசார் மாமிகளே இவரை அடையாளம் தெரிந்தால் உடனே போலீசாருக்குத் தகவல் கொடுங்கோ!

விவஸ்தையற்ற இந்த வீராதி வீர சூரப் பிரதாபரின்  அடையாளம் நெத்தியிலேப் பொட்டு, புத்தியிலே மட்டு, மார்பிலே பூணூலை (ஒருவேளை இப்போதைக்கு ஒளிக்கும் காலகட்டமானபடியால்) அதைப் பத்திரமாக வேறு எங்கோ மறைத்து வைத்திருக்கவும் கூடும்.

‘பெரியார் பூமியல்ல இது; அது போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரிலே இருக்கிற 2 ஏக்கர் பூமிதான். மீதியெல்லாம் பெரியாழ்வாரான எங்களவா பூமிதான்!' அப்படீன்னு சொன்னவர் இவர்.
என்னை ஒளித்து வைத்து ‘வீரஉலா'(?) வருவதற்கு - உதவி செய்ய  எனக்கில்லாத உறவுகளா? அல்லது காஞ்சி போன துறவுகளா?

தேடினால் எளிதில் கிடைத்துவிடுவதற்கு  நான் என்ன கடவுள் சிலை போன்றா - உடனே எடுத்து கடத்துவதற்கு!

எத்தனை அக்கிரகாரங்கள், கோவில் கருவறைகள், நாடக மன்றங்கள் தேடினாலும் அவ்வளவு எளிதில் கிடைப்பேனா?

‘மாயாவி'போல மறைந்திருக்கும் என்னைப் பிடிக்க எவ்வளவுதான் முயன்றாலும் எவராலும் முடியாது! எனக்கு டில்லி மேலிடம் வரை  - என் மேலிடம் காலி என்றாலும் - செல்வாக்கு உண்டே! எனவே, தேடினாலும் எளிதில் கிடைக்கமாட்டேன்.

என்னை எங்களவா சிலரே சரண்டர் ஆயிடு! ஆயிடுன்னு நச்சரிக்கிறா? முடிஞ்சவரை பார்ப்பேன். பிறகு தரிசனம் தருவேன். அதுவரை பாடிக்கொண்டே இருங்கள்.
மறைந்து மறைந்து ஓடுவேன்; ஓடிக்கொண்டே இருப்பேன்.

ஸ்காட்லாந்து யார்டு போலீசே வந்தாலும் ‘டிமிக்கி'த் திலகமாகி நான் அகப்படுவேனா?

ஜெய் காளி! ஜெய் சக்தி!
பாரத் மாதாக் கீ ஜே!'

இப்படி ஒருவர் கர்ஜித்தார், விழித்துப் பார்த்தேன் கனவு கலைந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner