எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கேள்வி: புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம் வீட்டுப் பூஜை அறை யில் வைக்கலாமா?

பதில்: அப்படி தனி கிருஷ் ணன் படமாக இல்லாமல் ராதை, பசுக்களுடன் கூடிய கிருஷ்ணன் படத்தை வைக்கலாம்.

ஆர்.எஸ்.எஸ்.இதழின் ஆசிரியர் மிகவும் சாமர்த்திய சாலிதான். கிருஷ்ணன் புல் லாங்குழல் ஊதுவது எந்த சூழலில்? ஆற்றில் பெண்கள் குளிக்கிறார்கள்-ஆற்றுக் கரையில்உடையைக்கழற்றி வைத்துவிட்டுநீராடகோகுலப் பெண்கள் சென்றபோது, அவர்களின் அந்த உடைகளை யெல்லாம் களவாடி, மரத்தின் கிளையில் உட்கார்ந்துகொண்டு புல்லாங்குழல் ஊதி பெண்களின் நிர்வாணத்தை ரசித்துக் கொண்டுள்ளான் கிருஷ்ணன் எனும் கடவுள்.

இந்தக் காட்சி உள்ள படத்தை வீட்டுக்குள் வைக்க முடியுமா? பூஜை அறையில் வைத்துப் பூஜிக்க முடியுமா? வீட்டில் உள்ள பிள்ளைகள் அந்த ஆபாசக் காட்சிபற்றி கேள்வி கேட்டால், தர்ம சங் கடமாகத்தானே இருக்கும் - அதனால்தான் விஜயபாரதம்' ஜாடைமாடையாக' இப்படி பதில் சொல்லியிருக்கிறது.

கேள்வி:பரதனாரே....யார் யார் உண்மையான தமிழர்கள்?

பதில்: சம்பந்தமே இல்லை என்றாலும்கூட, தினசரி பிரதமர் மோடியை, பா.ஜ.க.வை, ஆர்.எஸ்.எஸைத் திட்டுகிறவர்கள்தான் உண்மையான தமிழர்கள்; அல்லது தமிழ்ப் பேரறிஞர்கள் சீமான், திருமா, வைகோ, வீர மணி போன்றோரிடம் தமிழன்' என்பதற்கானசான்றிதழ்பெற் றவர்கள்மட்டுமேதமிழர்கள்'' என்கிறதுஆர்.எஸ்.எஸின் விஜய பாரதம்', (11.5.2018, பக்கம் 35).

உண்மையைஉணரவேண் டும். இந்தப் பட்டியலிலுள்ள பெயர்கள் யார்? யார்? ஒருவர் கூடப் பார்ப்பனர் இல்லை என்பதைக் கவனிக்கவும்.

இதிலிருந்து யார் எல்லாம் தமிழர்கள்? யார் எல்லாம்  தமி ழரல்லர்என்பதைஎளிதில் புரிந்து கொண்டு விடலாம் அல்லவா! (சீமான்களும் புரிந்து கொள்வார்களாக!)

அதே இதழில்,

கேள்வி: தமிழக அரசியல் குட்டிச்சுவரானதற்கு யார் காரணம்?

பதில்: ராஜாஜிதான் கார ணம். 1967 இல் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து காங்கிரசை தோற்கடித்தார். அன்று தொடங் கிய சாபக்கேடு இன்றுவரை தொடர்கிறது.

***

பெரியராஜதந்திரி,சாணக் கியர்,உடம்பெல்லாம்அவ ருக்கு மூளை என்று பார்ப் பனவட்டாரம்தூக்கிச்சுமக் கும்ராஜாஜிஒன்றும்அறி வாளியல்ல என்று காலந்தாழ்ந் தாவது ஆர்.எஸ்.எஸ். ஒப்புக் கொண்டதற்கு நன்றி!'

அதுசரி, அதற்குப் பிறகு பி.ஜே.பி. தி.மு.க.வோடுகூட்டுச் சேர்ந்ததே - அந்த சாபக்கேட் டி'லிருந்து புத்தி கொள்முதல் பெறாதது ஏன்?

அட சந்தர்ப்பவாதமே, உன் பெயர்தான் ஆர்.எஸ்.எஸா - விஜயபாரதமா?

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner