எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 15 பெண் பத்திரிகையாளரை அவதூறு செய்த வழக்கில் தேடப்படும் எஸ்.வி.சேகரை 7 நாள்களுக்குள் கைது செய்யவில்லைஎன்றால்,நீதிமன்றஅவ மதிப்பு வழக்கு தொடரப்படும் என்று சென்னைகாவல்துறைஆணையருக்கு, வழக்குரைஞர் தாக்கீது அனுப்பப்பட்டுள் ளது.

நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகர், கடந்த மாதம் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளி யிட்டார். இது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. எஸ்.வி.சேகர்மீது காவல் நிலையத்தில் பத்திரிகையாளர் மிதார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தனக்கு முன்ஜாமீன் வழங்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை பெண் நீதிபதி எஸ்.ராமதிலகம் விசாரித்து, சட்டம் எல்லோருக்கும் பொது வானது தான். ஒரு வழக்கில் சாதாரண மனிதன் மீது காவல்துறையினர் எப்படி நடவடிக்கை எடுப்பார்களோ, அதுபோல இவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை நீதிபதி கடந்த 10- ஆம் தேதி பிறப்பித்தார். ஆனால், இது வரை எஸ்.வி.சேகரை கைது செய்ய காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதையடுத்து பத்திரிகையாளர் முரளிகிருஷ்ணன் சின்னத்துரை சார்பில் வழக்குரைஞர் டி.அருண், சென்னை காவல் துறை ஆணையருக்கும், சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளருக்கும் நீதிமன்ற அவமதிப்பு தாக்கீதை நேற்று அனுப்பியுள்ளார்.

அந்த தாக்கீதில் கூறியிருப்பதாவது:-

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், எஸ்.வி. சேகரை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயர்நீதிமன்றத்தின் உத்த ரவை நீங்கள் (காவல்துறை ஆணையர், ஆய்வாளர்) கேலிக் கூத்து ஆக்கியுள்ளர்கள்.

அதேநேரம், கடந்த 12 ஆம் தேதி சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண னுடன், எஸ்.வி.சேகர் கலந்து கொண்டுள் ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

இது நீதித்துறைமீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கும் விதமாக உள்ளது. காவல்துறையின் இந்தச் செயல், நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல, நீதித்துறையின் உத்தரவுக்கு உள்ள கம்பீரத்தின் மீது தாக்குதல் நடத்துவது போலவும் உள்ளது.

எனவே, இந்த தாக்கீது கிடைத்து 7 நாள்களுக்குள், உயர்நீதிமன்றத்தின் உத்தர வின்படி, எஸ்.வி.சேகரை கைது செய்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கவேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், உங்கள் (காவல் துறை ஆணையர், ஆய்வாளர்) மீது என் கட்சிக்காரர் நீதிமன்ற அவமதிப்பு சட்டத் தின் கீழ் வழக்கு தொடர்வார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழர் தலைவரின் அறிக்கை

பெண்களை அவதூறாகப் பேசிய எஸ்.வி.சேகரை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்றால், அதற்காக ஒரு போராட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner