எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பழநி, மே 15 பழநி கோயில் சிலை வடிவமைத்ததில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக அறநிலையத்துறை முன்னாள் கோயில் இணை ஆணையர், நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.இது வரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் 2004 ஜன.26- இல் நவபாஷாண சிலைக்கு முன்பாக 3 அடி உயரத்தில் தங்கம் உள்ளிட்ட உலோகத்தால் ஆன புதிய சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை சில மாதங்களிலேயே கருத்துப் போய்விட்டதால், அகற்றப்பட்டது. சிலை செய் ததில் முறைகேடு நடந்துள்ளது அப்போதே தெரியவந்தபோதும், இதுகுறித்து அரசு உள்பட யாரும் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் வேறொரு வழக்கில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை யினர் நடத்திய விசாரணையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்தபதி முத்தையா சிக்கினார். இவரிடம் நடத்திய விசாரணையில் பழநி கோயில் சிலை வடிவமைத்ததில் முறைகேடு நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஸ்தபதி முத்தையா மற்றும் அப்போது பழநிகோயில்இணைஆணை யராகஇருந்தகே.கே.ராஜாஆகியோரை சிலை கடத் தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பழநி கோயில் சிலை முறைகேடு வழக்கை சிபிசிஅய்டி காவல் துறையினர் விசாரணைக்கு அரசு மாற்றியது.

இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கில் மீண்டும் அய்.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலானசிலைகடத் தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரிக்க நீதிமன் றம் உத்தரவிட்டது.

இந்நிலையில்,பழநிகோயி லில் புதிய சிலை நிறுவப்பட்ட போது, துணை ஆணையராக பணிபுரிந்தவரும், பின்னர் திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து தற்போது ஓய்வுபெற்றவருமான பழநி பழைய ஆயக்குடியைச் சேர்ந்த புகழேந்தி, சென்னை யைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறைநகைமதிப் பீட்டாளர் தேவேந்திரன் ஆகி யோரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner