எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மே 15 பிரதமர் நரேந்திர மோடி தரம் தாழ்ந்து பேசுவதாகவும், அது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று சுட்டிக்காட்டுமாறும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் ஒன்றை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ளார்.

அதில், பிரதமர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு பிற கட்சித் தலைவர்களைப் பற்றி தேவையற்ற, மிரட்டும் வகையிலான, மோசமான வார்த்தைகளை மோடி பயன்படுத்துகிறார்; அது அவர் வகித்து வரும் பிரதமர் பதவிக்கு பொருத்த மற்றது; இதுகுறித்து, அரசியல் சாசனத்தின் தலைமை பொறுப்பிலுள்ள குடியரசுத் தலைவர், பிரதமரை எச்சரிக்கை செய்யவேண்டும் என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இதற்கு முன் பிரதமர் பதவி வகித்த அனைத்து உயர்ந்த மனிதர்களும், கண்ணி யத்தையும், ஒழுக்கத்தையும் நிலைநாட்டி மக்களுக் கான கடமையை முறைப்படி ஆற்றி விட்டுச் சென்று இருக்கின்றனர்; அவ்வாறிருக்க, போற்றத்தகுந்த நம்முடைய ஜனநாயக நாட்டில், அரசின் தலைமைப் பதவியில் இருக்கும் பிரதமர் மிரட்டும் தொனியிலும், எதிர்க்கட்சித் தலைவர்களை எச்சரிக்கும் வகை யிலும், அச்சுறுத்தும் வகையிலும் பேசுவார் என கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியவில்லை என்று கூறியுள்ள மன்மோகன் சிங், காங்கிரசு தலைவர்கள் மட்டுமின்றி வேறு எந்த கட்சித் தலைவர்களையும், பிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசக்கூடாது என்றும், காங்கிரசு கட்சியோ, அதன் தலைவர்களோ, இந்த மிரட்டல்களுக்கு பயப்படும் கோழைகள் இல்லை என்றும் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

இந்தக் கடிதத்தில் மக்களவை எதிர்க்கட்சிக் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், திக் விஜய் சிங், அகமது படேல், கபில் சிபல் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner