எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சிறீநகர், மே 15 கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை விவ காரத்தில் சி.பி.அய். விசாரணை வேண்டாம் என்பவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் கொக்கரித்துள்ளார்.

காஷ்மீர்மாநிலத்தில்கத் துவாபகுதியில்8வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்க ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.  இக்கொடூர நிகழ்வு தொடர்பாக  குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் காஷ் மீர் மாநில பாஜக அமைச் சர்கள் கலந்துகொண்டது சர்ச் சைக்குள்ளாகியது.

அதையொட்டி அவர்கள் அமைச்சரவையில்இருந்துவில கினார்கள்.அவ்வாறுஅமைச்சர வையில்இருந்து விலகிய வர்களில் லால்சிங் என்பவரும் ஒருவர் ஆவார்.  தற்போது காஷ்மீர் மாநில சட்டசபை உறுப்பினராகமட்டும்இருக் கும்அவர்மேலும்சர்ச்சை யைக்கிளப்பும்வகையில் பேசியுள்ளார்.  பாலியல்வன் கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மற்றும் வழக்கு ரைஞர்கள் சிபிஅய் விசாரணை வேண்டாம் என்று கூறிவரும் நிலையில், பாஜகவினரும் மத் திய அமைச்சர்களும் சிபிஅய் விசாரணை வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

இது தொடர்பாக பாதுகாப் புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறுமி கொலையில் சிபிஅய் விசாரணை கட்டாயம் வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், உச்சநீதிமன்றம் இதற்கு அனுமதியளிக்காமல் வழக்கை பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டிற்கு மாற்றி தின சரி விசாரணை நடத்த உத்தர விட்டுள்ளது.

இந்த நிலையில் குற்றவாளி களுக்கு ஆதரவாக செயல்பட்டு அமைச்சர் பதவியை இழந்த காஷ்மீர் பாஜக சட்டமன்ற உறுப்பினர்லால்சிங்ஊடக வியலாளர்களிடம் பேசும்போது,

காஷ்மீர் மக்களையும் இந்துக்களையும் அவமதிக்க செய்த சதி திட்டம்தான் கத்துவா நிகழ்வு ஆகும். இப்படுகொலையை நாடு முழுவதும் கொண்டுசென்று நமது காஷ்மீர் இந்துக்களின் பெயருக்கு களங்கள் விளை விக்கமுயல்கின்றனர்.இப்படு கொலையில் சிபிஅய் விசாரணைஅவசியம்தேவை.  சிபிஅய் விசாரணை தேவை யில்லை என்பவர்கள் பாகிஸ் தானியர்கள்தான், அவர்கள் இந்திய மனநிலையில் இல்லை. சிபிஅய் விசாரணை வேண்டாம் என்பவர்களிடம் நான் சிபிஅய் என்பது பாகிஸ்தான் நாட்டு விசாரணை ஆணையமா என வும் கேட்க விரும்புகிறேன் என கூறி உள்ளார்.

இது காஷ்மீர் மக்களிடையே கடும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner