எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தருமபுரி, மே 16- நேற்று (15.5.2018) தருமபுரிக்குச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய் தியாளர் களுக்குப் பேட்டியளித்தார். அப்பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்: கருநாடக மாநிலத்தில் தொடர்ந்து பா.ஜ.க. முன்னிலை பெற்று வருகிறது. ஏற்கெனவே மோடி சொன்னார், இந்தியாவில் இரண்டு மாநிலங்களில் மட்டும்தான் காங்கிரசு ஆட்சியில் இருக்கும் என்று சொல்லியிருந்தாரே?

தமிழர் தலைவர்: தேர்தல் முடிவுகள் இன்னும் திட்ட வட்டமாக அறிவிக்கப்படாவிட்டாலும், ஒரு போக்கு என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. ஏற்கெனவே அவர்கள் பலவிதமான முறைகளைக் கையாண்டிருக்கிறார்கள். வாக்காளர்களுக்குப் பணம் என்பதெல்லாம் மிகத் தெளிவாக வெளிவந்திருக்கிறது.

ஆகவே, இதைப் பொருத்தவரையில், இந்தத் தேர் தல் முறையில் மிகப்பெரிய குறைபாடுகள் இருக்கின்ற வரையில், இப்படிப்பட்ட நிலைகள் வரத்தான் செய்யும். இதையும் தாண்டி, இந்த அளவிற்கு காங்கிரசும், மற்றவர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அதேநேரத்தில் ஒன்று, பி.ஜே.பி. தனித்தே ஆட்சி அமைக்கக் கூடிய அளவிற்கு கருநாடக மாநில வாக் காளர்கள் உத்தரவு கொடுக்கவில்லை என்பது அடிக் கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய ஒன்று.

ஆகவே, நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று அவர்கள் சொல்வது, ஆட்சி அமைக்கக் கூடிய அள விற்கு அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. இருந் தாலும், மற்ற காரியங்களில் அவர்களுக்குத் துணை போயிருக்கிறார்கள். இது தேர்தலில் உள்ள குறைபாடு. இந்த முறைகள் அடிப்படையில் மாற்றம் ஏற்பட்டா லொழிய, இவைபோன்றவை மாறாது.

காரணம் என்னவென்றால், ஊழலை ஒழிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு, ஊழலில் திளைத் தவர்கள்தான் ஏராளமாக வேட்பாளர்களாக இருக்கிறார் கள் எல்லாக் கட்சிகளிலும். அந்த முறையை மாற்ற வேண்டும் என்பதுதான் அடிப்படையான, ஜனநாயகத் தைக் காப்பாற்றுவதற்கான வழியாகும்.

செய்தியாளர்:  அடிப்படையில் மாற்றம் வேண்டும் என்கிறீர்களே, எந்த மாதிரி மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: தேர்தல் முறைகளில் மாற்றம், தேர்தல் சட்டங்களில் மாற்றம் என்பதுதான் அடிப்படை.. முதலாவதாக, கட்டாய வாக்களிப்பு என்பது வரவேண் டும். வாக்களிக்காதவர்களுக்கு சில தகுதி நீக்கம் என்று வந்தால், பணம் கொடுத்துத்தான் வாக்காளர்களை அழைத்துச் செல்லவேண்டும் என்ற நிலை இருக்காது. இதுபோன்ற பல மாற்றங்கள் வரவேண்டும்; தேர்தல் சீர்திருத்தங்கள் வரவேண்டும்.

அதற்கடுத்தபடியாக, கருநாடகத் தேர்தல் வரை காத்திருந்து, தமிழகத்தைப் பாலைவனமாக்கும் காவிரி நதிநீர் ஆணையம் என்ற ஒரு திட்டத்தைக் கொடுத்திருக் கிறோம் என்று மத்திய அரசு சொல்லியிருக்கிறது. அதைப்பற்றி முழு விவரம் எங்களுக்குத் தெரியாது.

ஏற்கெனவே நடுவர் மன்றம் சொன்ன திட்டத்தைச் செயல்படுத்தாமல் இருப்பது வரவேற்கத்தக்கதல்ல. அவசரப்பட்டு தமிழக அரசு, எங்களுக்கு வெற்றி! எங்களுக்கு வெற்றி! என்று சொல்வது இருக்கிறதே, அது எந்த அளவிற்கு சரியானது என்று தெரியவில்லை.

முழுமையாக தெரியாத நிலையில், தமிழக அரசு இந்த நிலைப்பாட்டை எடுப்பது சரியானதல்ல. உடனே அவர்கள் அனைத்துக் கட்சி, விவசாயிகள் கூட்டத்தைக் கூட்டி, அந்தக் கூட்டத்தில் முடிவெடுத்து, இதுதான் தமிழகத்தின் நிலைப்பாடு என்பதை உச்சநீதிமன்றத்திற் குத் தெளிவாகச் சொல்லவேண்டியது அவசரமும், அவசியமும் ஆகும்! - இவ்வாறு திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner