எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி

ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையே!ஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாரா?

கருநாடக மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காத நிலையில், கருநாடகத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.பொம்மை என்ற புகழ்பெற்ற வழக்கின்மீதான உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அதிக எண்ணிக்கையைக் காட்டும் கட்சியை ஆளுநர் அழைக்கவேண்டும் - அப்படி இல்லை என்றால், குதிரைப் பேரத்திற்குத்தான் வழிவகுக்கும் - கருநாடக மக்கள் எச்சரிக்கையுடன் கண்காணிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கருநாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரசு - பா.ஜ.க. - மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய முக்கிய மூன்று கட்சிகளில் எந்தக் கட்சியுமே அறுதிப் பெரும்பான்மை (Absolute Majority) பெறவே இல்லை.

பா.ஜ.க. - 104

காங்கிரசு - 78

ம.ஜ.தளம் - 37

பகுஜன் சமாஜ் - 1

கருநாடக ஜனதா கட்சி - 1

சுயேச்சை - 1

என்ற எண்ணிக்கையில்தான் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன நேற்று (15.5.2018).

"எஸ்.ஆர்.பொம்மை'' வழக்கு - தீர்ப்பு என்ன சொல்லுகிறது!

ஜனநாயக முறைப்படி, அரசியல் சட்டத்தின் விளக்கம் உச்சநீதிமன்றத்தால் தரப்பட்டபடி 1. எஸ்.ஆர்.பொம்மை வழக்கு (1994, மார்ச்) - ஏழு நீதிபதிகள் அமர்வு.

2. ராமேஷ்பார் பிரசாத் வழக்கு (2006) - அய்ந்து நீதிபதிகள் அமர்வு

ஆகியவற்றின்படி, ஆளுநரின் (அறிவியல் பூர்வ) விருப்பத்திற்கேற்ப என்பது சில நியதிகளை அடிப் படையாகக் கொண்டுதான் இயங்க முடியுமே தவிர, தன் மனம் - விருப்பத்திற்கேற்ப தன்னிச்சையாக முடிவு எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதித்ததோடு, இரண் டாவது சுட்டப்படும் வழக்கில், தேர்தலுக்கு முன்பே கூட்டணி என்றுதான் இருக்கவேண்டும் என்பதல்ல; தேர்தலுக்குப் பின்பும் கூட்டணி அமைந்தால், அது தவறில்லை. மாறாக, அதனையும் ஆளுநர் பரிசீலித்து அரசு அமைக்க வாய்ப்பளிக்கத் தவறக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காங்கிரசும் - மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டு!

இந்தப் பின்னணியில் கருநாடகத் தேர்தல் முடிவு களுக்குப்பின், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு காங்கிரசு கட்சி தனது நிபந்தனையற்ற ஆதரவைத் தருவதாகக் கூறியதோடு, தேவகவுடாவும், குமாரசாமியும் அதனை ஏற்றுமுள்ளனர்.

தேர்தல் முடிவுகளுக்கு முன்னரேகூட, தேவகவுடா எக்காரணத்தை முன்னிட்டும், பா.ஜ.க.வோடு தங்கள் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டு சேராது என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் மதச்சார்பின்மையை முக்கியக் கொள் கையாகக் கொண்ட காங்கிரசு, தேவகவுடாவின் மதச் சார்பற்ற ஜனதா தளத்திற்கு தனது ஆதரவை அளித்தது கொள்கை ரீதியான கூட்டணி என்பதால், யாரும் குறை கூறவே முடியாது.

கருநாடக ஆளுநர் பச்சை ஆர்.எஸ்.எஸ்.காரர்!

தனிப்பெரும் பலம் கொண்டதாக 104 பேர்களைக் கொண்ட கட்சி என்பதால், அதன் தலைவரான (முதல மைச்சர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட) எடியூரப் பாவை ஆளுநர் அழைத்தது சரியான நிலைப்பாடே அல்ல.

கருநாடக ஆளுநர் பழுத்த பச்சை ஆர்.எஸ்.எஸ்.காரர். முன்னாள் ஜனசங்கத்தை குஜராத்தில் தொடங்கியவர். அவர் இப்படி ஒரு பக்கம் சாய்ந்ததுபோல் நடப்பதும், அக்கட்சிக்கு ஆட்சி அமைக்க ஏழு நாள்கள் அவகாசம் கொடுப்பதும் ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்குவதும், பொது ஒழுக்கச் சிதைவுக்கும் வழிவகுப்பதாகும்.

குதிரை பேரத்திற்கு வழிவகுப்பதா?

வெற்றி பெற்ற எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரம்' வெகுவேகமாகத் தொடங்கி விட்ட நிலையையே அது ஊக்குவிப்பதாகும்!

ஒரு வாக்காளருக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை தரப்பட்டதாகப் பரவலாகப் பேச்சு அடிபடும் நிலையில், எம்.எல்.ஏ.,க்களும் அங்கு விலை உயர்ந்த நிலை வெகுவேகமாக நோய்க் கிருமிகளைப்போல் பரவிடவே செய்யும்.

7 நாள்களும் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 9 அல்லது 10 பேர் பா.ஜ.க.வுக்குத் தேவை என்பதால், அவர்களைக் கட்டிக் காப்பாற்றுவது என்பது மிகப்பெரிய கூவத்தூர்'' வேலையாகும்!

 

கோவாவிலும் - மணிப்பூரிலும் நடந்தது என்ன?

அதிக எண்ணிக்கையுள்ளவர்களை ஆட்சியமைப்ப தற்கு (Single Largest Party) அழைப்பதுதான் சரி என் பது கருநாடகத்தில் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். வாத மானால், அதே வாதம் Single Largest Party ஆன காங்கிரசை மணிப்பூரிலும், கோவாவிலும் ஆளுநர்கள் நடைமுறைப்படுத்தி காங்கிரசு கட்சியை அழைக்க வில்லையே ஏன்?

பா.ஜ.க.விற்கு ஒரு நீதி - நடைமுறை - இதர காங்கிரசு போன்ற எதிர்க்கட்சிகளுக்கு வேறு கண்ணோட்டம் என்பது ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதோடு, அரசியல் சட்டத்தினையும் உடைக்கும் முயற்சிதான் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்லக்கூடும்?

கருநாடக மக்களின் கடமை!

கருநாடக மக்கள் - வாக்காளர்கள் இதனை ஏற்பார் களா? முடியுமா? நீதிமன்றங்களும், ஆளுநர் மாளி கைகளும் வெகுமக்கள் கிளர்ச்சியைத் தூண்டுவதுபோல தங்களின் போக்கை - நிலைப்பாட்டை எடுக்கலாமா?

குதிரை பேரத்தைத் தடுத்து, ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டியதும், விழிப்பாக அதைக் கண் காணிப்பதும் அந்த மக்களின் சீரிய கடமையாகும்!

 

கி.வீரமணி

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

16.5.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner