எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, மே 17 -கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 222 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. மிக அதிகபட்சமாக 72.13 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்கு எண்ணிக்கையின் முடிவில், பாஜக 104 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப் பெரும் கட்சியாக வந்தாலும், அந்த கட்சி பெற்ற மொத்த வாக்குகள், காங்கிரசு பெற்றதை விடவும் குறைவாகும். பதிவான வாக்குகளில் பாஜக பெற்றது 36.2 சதவிகித வாக்குகள் தான். காங்கிரசு கட்சிக்கோ 37.9 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன. அதுமட்டுமல்ல, பாஜக 29 தொகுதிகளில் தனது டெபாசிட்டைப் பறிகொடுத்துள்ளது. சில தொகுதிகளில் நோட்டாவிடமும் பாஜக தோற்றிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டு, இரண்டாமிடம் பெற்ற பாஹேபள்ளி தொகுதியில் பாஜக வேட் பாளர் சாய்குமாருக்கு (4140 வாக்குகள்) டெபாசிட் போனது.

இதேபோல பத்ராவதி, சிக்கபல்லபூர், தேவனஹள்ளி, குர்மித்கல், ஹோலி நரசி புரம், ஹூனசூரு, கனகாபுரா, கோலார், கொரட்டாகெரி, சிந்தாமணி, கிருஷ்ண ராஜநகரா, கிருஷ்ண ராஜபேட்டை, மட்டூரு, மதுகிரி, மகாதி, மழவள்ளி, மேலுகோட், முல்பகல், நாகமங்கலா, பவகடா, பெரிய பட்டணா, புலிகேசி நகர், ராமநகரம், சரவணபெலகெலா, சிறீரங்கபட்டணா, சித்லஹட்டா, சிறீனிவாசபூர், டி.நரசிப்பூர் ஆகிய தொகுதிகளில் பாஜகவின் டெபா சிட்டை மக்கள் பறித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner