எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருநாடகாவில் மே 12 ஆம் தேதியன்று மொத்த முள்ள 224 தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் தவிர, மற்ற அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது. 72.4 விழுக்காடு வாக்குகள் பதி வானது. பதிவான வாக்குகள் 15.5.2018- அன்று எண்ணப்பட்டன. மொத்தமுள்ள தொகுதிகளில் பாஜக 104 தொகுதிகளைப் பெற்றது. இருப்பினும் அதற்குப் பெரும்பான்மை இல்லாமல் போனது.

காங்கிரசு - ம.ஜ.த. கூட்டணி

இந்த நிலையில் 78 இடங்களைப் பெற்ற காங்கிரசு, 37 இடங்களைப் பிடித்த மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முன்வந்தது.  பிறகு காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரின.

ஆனால், ஆளுநர் வாஜுபாய் வாலா, பெரும் பான்மை உள்ள காங்கிரசு - மஜத கூட்டணியை அழைக்காமல் 104 இடங்களைப் பெற்ற பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இந்த விவகாரத்தை காங்கிரசு 16.5.2018 அன்று இரவே நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றது.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எடியூரப்பா பதவியேற்கத் தடையில்லை என்றும் எடியூரப்பா ஆளுநரிடம் அளித்த கடிதத்தை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை இன்று (18.5.2018) தள்ளி வைத்தனர்.

உச்சநீதிமன்றம் விசாரணை

இதனை அடுத்து ஆளுநர் வாஜுபாய் வாலா 17.5.2018 அன்று எடியூரப்பாவிற்கு பதவிப் பிர மாணம் செய்து வைத்தார். மூத்த வழக்குரைஞர் ராம்ஜெத்மலானியும் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக மனு தாக்கல் செய்தார். இந்த இரு மனுக் களும் இன்று (18.5.2018) விசாரணைக்கு வந்தன.  மத்திய அரசு சார்பில் தலைமை வழக்குரைஞர் வேணுகோபால், கருநாடக பாஜக சார்பில் முகுல் ரோத்கி, காங்கிரசு சார்பில் அபிஷேக் சிங்வி ஆஜராயினர்.

வழக்கு விசாரணையின் போது, காங்கிரசு  -- மஜத கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறிய நிலையில், பாஜகவை ஆளுநர் அழைத்தது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, மஜதவின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் குமாரசாமிக்கு ஆதரவாக கையெழுத்திடவில்லை. எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என பாஜக தரப்பு வழக்குரைஞர் முகுல் ரோத்கி பதிலளித்தார்.

எடியூரப்பா நாளையே பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாரா? என நீதிபதிகள் கேட்டனர்.

காங்கிரசு -- மஜத கூட்டணியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என காங்கிரசு தரப்பு வழக்கு ரைஞர் வாதிட்டார். ஆளுநரின் முடிவை ஆய்வு செய்வது அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு இரண்டில் ஏதாவது ஒன்றுதான் தீர்வு என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அச்சமின்றி எம்.எல்.ஏ.க்கள் வாக் களிக்க வசதி செய்யப்படவேண்டும், வாக் கெடுப்பு வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டது.

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள்,  நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு எடியூரப்பா, தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெ டுப்பு நடத்தாமல் கைகளைத் தூக்கி வாக்களிக் கும் முறையை பின்பற்றவேண்டும். தேர்ந்தெடுக் கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner