எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 18 ஜாதியற்ற சமுதாயம் உருவாக கேரள அரசைப் போன்று தலித்து களை அர்ச்சகராக்க பிற மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று கேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளா இடது முன்னணி அரசு தலித் மக்களை அர்ச்சகராக்கியது. இதனைப் பாராட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ‘அம்பேத்கர் சுடர்' விருது வழங்கப்பட்டது. முதலமைச்சர் சார்பில் விருதை பெற்றுக் கொண்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பேசியதாவது:

‘அம்பேத்கர் சுடர்' விருது பெறுவது பெருமையாக உள்ளது. இடதுசாரி அர சாங்கத்திற்கும்,மலையாளிகளுக்கும்உற் சாகம்தருகிறது.எங்களுடையமுயற் சியை எல்லைதாண்டி நீங்கள் வரவேற்றி ருப்பதற்கு நன்றி. தலித் மக்களை அர்ச்சகராக்கியது ஒரு மவுனப்புரட்சி. காலங்காலமாக ஒடுக்கப்பட்ட, துன்புறுத் தப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு பெருமைமிகு நிலையை இடது முன் னணி அரசு ஏற்படுத்தி இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் கோவில் உள்ள பாதையில் செல்வதற்கு கூட அருகதையற்றவர்களாக கருதப்பட்ட காலத்தில் வைக்கம் போராட்டம் நடை பெற்றது.

தந்தை பெரியாரின் நிகரில்லா தலை மையின் கீழ் நடைபெற்ற அந்தப் போராட்டம் 603 நாட்களுக்கு பிறகு வெற்றி பெற்றது. அதன் நன்மதிப்பாகவே வைக்கத்தில் தந்தை பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. பார்ப் பனர் அல்லாதோர், தலித் மக்களை அர்ச்சகராக்கும் 2 ஆம் கட்ட நிகழ் வுக்கு எந்தப் போராட்டமும் நடக்கவில்லை. முதல் ஆலய நுழைவு அறிவிப்பு பார்ப் பனர்அல்லாதோர் கோவிலுக்குள்செல்ல வாய்ப்பு வழங்கியது. கேரள இடது முன்னணிஅரசின் இரண்டாவது அறி விப்பு பார்ப்பனர் அல்லாதோருக்கு கர்ப் பக்கிரகத்திலேயே இடம் வழங்கி உள்ளது. தலித் மக்கள் மட்டுமல்ல சாதி அற்றவர்கள் அர்ச்சகர்களாகும் வரை எங்களின் முயற்சி தொடரும்.

ஜாதியற்ற சமுதாயம் விரைவில் அமைய கேரள அரசின் நடவடிக்கையை பிற மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும்.தமிழகம் பல முற்போக்கு சிந்தனைகளுக்கு சொந்தமானது. அய்யா வைகுண்டசாமி தொடங்கி ஜாதியற்ற சமுதாயம் படைக்க திராவிட இயக்கங்களும், கம்யூனிஸ்ட் டுகளும் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து பெரும் பங்காற்றி வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner