எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, மே 18 குட்கா வழக்கை சிபிஅய் விசாரிக்க தடையில்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டுமனுவைஉச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

குட்கா வழக்கை சிபிஅய் விசாரிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (மே 18) தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்தில் தடை செய் யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கக் கோரியும், சட்டவிரோதமான குட்கா விற்பனைக்கு சுகா தாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், காவல்துறை டிஜிபி ராஜேந்திரன், காவல் துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் அனுமதித்தது குறித்து சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஏப்ரல் 26- இல் விசாரித்தசென்னைஉயர்நீதி மன்றம், இந்த வழக்கை சிபிஅய்  விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்துஇந்த உத்தரவுக்குஎதிராகதமிழக சுகாதாரத்துறைஅதிகாரி இ.சிவக்குமார் உச்சநீதிமன்றத் தில் மேல்முறையீட்டு மனு வைத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த திங்கள்கிழமை (மே 14) நடைபெற்றது. அப்போது, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள்ரோஹிங்டன் ஃபாலி நாரிமன், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங் கிய அமர்வு இன்று பிறப்பித்தது. அதில், குட்கா வழக்கை சிபிஅய் விசாரிக்கதடையில்லை என்று கூறி, சிவக்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.

--------------------------------------------------------------

அறிவிப்பு என்னாச்சு?

தமிழ்நாட்டில் 2065 ஏரி களைப் புனரமைக்க ரூ.300 கோடி ஒதுக்கப்படும் என தமிழக அரசின் அறிவிப்பு வெறும் அறி விப்பு மட்டும்தானா?

--------------------------------------------------------------

இன்றைய ஆன்மிகம்?

ஒத்துக்கொள்வார்களா?

திருமாலுக்கு சிவபெருமான் குருவாக இருந்து உபதேசம் செய்தார் என்றெல்லாம் ஆன்மிகச் செய்திகள் வருகின்றனவே - இதனை வைணவர்கள் - ஜீயர்கள் ஒத்துக்கொள்வார்களா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner