எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, மே 18 -பாஜக ஆளும் ஜார்கண்ட்மாநிலம்தியோகர் மாவட்டத்தில்எய்ம்ஸ்மருத்து வமனை அமைக்க மோடி அரசுஒப்புதல் அளித்துள் ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதுடில்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. நாட்டில் செயல் படுத்தப்படவுள்ள பல்வேறு திட்டங்களுக்கு அப்போது ஒப் புதல் வழங்கப்பட்டது. இதில் பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஜார்கண்ட் மாநிலம் தியோகர்மாவட்டத்தில் 1,103 கோடி ரூபாய்மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்புதலும் ஒன்றாகும்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. ஆனால் மத்திய அரசு இவ்விவகாரத்தில் ஒரு முடிவுக்கும் வரவில்லை. ஆனால், ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் 1,103 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங் கியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.காரர் நியமனம்

காரைக்குடி அழகப்பா பல் கலைக் கழகத்திற்கு  ஆட்சி மன் றக் குழு உறுப்பினராக ஆர்.எஸ்.எஸ்.காரரான ஆர்.சுவாமிநாதன் என்ற பார்ப்பனர் நியமிக்கப் பட்டுள்ளார். இவர் நடத்தும் பள்ளியில் ஆண்டுதோறும் ஆர்.எஸ்.எஸ். சாகா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

எகிறியது

2018 ஜனவரி - மார்ச் இடையிலான காலாண்டில் 20 வங்கிகளில் வாராக் கடன் 32 விழுக்காடு எகிறியுள்ளது. இது ரூ.3.46 லட்சம் கோடியாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner